Tuesday, 20 June 2017

எம்ஐஇடி-இன் அறங்காவலராக டத்தோஶ்ரீ விக்னேஸ்வரன் நியமனம்!


கோலாலம்பூர்-
மஇகாவின் கல்வி அமைப்பான எம்ஐஇடி-இல் மேலவை சபாநாயகரும் மஇகா உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எம்ஐஇடி-இன் 30ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற வேளையில் இந்த கூட்டத்தில் புதிய அறங்காவராக டத்தோஶ்ரீ விக்னேஸ்வரன் முன்மொழியப்பட்டு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் எம்ஐஇடி-இன் தலைவராக மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தொடர்ந்து செயல்படுகின்றார்.


10 பேர் கொண்ட எம்ஐஇடி-இன் அறங்காவலர் குழுவில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், டான்ஶ்ரீ ஜி.வடிவேலு, டான்ஶ்ரீ மாரிமுத்து ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

நவீன் மரணம்: 4 பேர் மீது கொலை குற்றச்சாட்டு


ஜோர்ஜ்டவுன் -
18 வயது இளைஞர் தி.நவீனை பகடிவதை செய்து கடுமையாக தாக்கி மரணம் விளைத்த ஐந்து இளைஞர்களில் நால்வர் மீது கொலை குற்றச்சாட்டுசுமத்தப்பட்டது.

நவீனின் நண்பர் தி.பிரவீனை தாக்கியது தொடர்பில் இவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர் என தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அனுவார் ஒமார் தெரிவித்தார்.

இந்த ஐவரில் ஒருவர்  அரசு தரப்பு சாட்சியாக அழைக்கப்படுவதாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 118 இன் கீழ் போலீஸ் மசோதாவின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலையில் கடுமையாக தாக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பலனின்றி நவீன் கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார்.

கடந்த 9ஆம் தேதி ஐந்து பேர் கொண்ட கும்பலால்  பகடிவதை செய்து சித்திரவதை செய்து, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மிக கொடுமையாக தாக்கப்பட்டார்.

இதனையடுத்து பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தார்.

நவீனுடன் தாக்கப்பட்ட அவரது நண்பர் பிரவீன் வலுது கண்ணில் ஏற்பட்ட கடுமையான காயங்களின் விளைவாக கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை - டத்தோஶ்ரீ அன்வார்


கோலாலம்பூர்-
நம்பிக்கைக் கூட்டணிக்கான பிரதமர் வேட்பாளர்கள் என்ற நிலையை தாம் ஏற்கப்போவதில்லை என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்றுவதே நம்பிக்கைக் கூட்டணியின் இலக்காக இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற விவகாரம் இக்கூட்டணியை சோர்வடைய வைக்கிறது.

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றால், தாம் பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை எனவும் தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயலாற்ற வேண்டும்.

பிரதமர் வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் விவாதங்களை சுட்டிக் காட்டிய அவர், இவிவகாரத்தை வாக்காளர்களின் விருப்பத்திற்கே விட்டு விடலாம் என டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Federal, state governments should offer job opportunity to Nhaveen’s mum


Georgetown, June 19-
While the family of brain-dead teenager, Nhaveen (18) who was brutally assaulted and died last Thursday at the Penang Hospital, has been receiving condolences throughout nation, the federal, state governments should come forward to help them face the challenges said Sungai Siput M.I.C secretary K.Manimaran.

Nhaveen was brutally murdered while he was eagerly waiting to start his higher studies at Kuala Lumpur. The death of Nhaveen is certainly unacceptable by the single mother who was relying on his moral support. The teenager was the hope of this family which lived a moderate life.

Nhaveen’s mother D.Shanti, has been hoping that he would shoulder the family in future, is now inconsolable. It is now vital for her to overcome the challenges.  

After meeting Nhaveen’s mother and the family K.Manimaran suggested, under the humanitarian ground, the federal, state governments should offer a job opportunity to Nhaveen’s mother. It would be a relief to her who is struggling to accept the loss of her son.

Various parties including prime minister. Chief minister have been pouring their condolences to the deceased family. It would be more appropriate if they could offer helps relevant to the needs of the family. 

Sungai Siput M.I.C. youth president S. Lingeswaran who accompanied Manimaran, also shared the sad moment with Nhaveen’s family. 

பள்ளிகளுக்கு வெளியே குற்றச்செயல் ஆசிரியர்கள் மீது பழி போட வேண்டாம்!


கோலாலம்பூர்
-
பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆசிரியர்கள் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்ளும்படி தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளிக்கு அப்பால் நடக்கும் விஷயங்கள் ஆசியர்கள் பற்றி ஆசிரியர்கள் அக்கறை கொள்ள வேண்டும் என விடுத்திருக்கும் கோரிக்கையில்  நிறைந்துள்ள சவால்களை கருத்தில் கொள்வது அவசியமாகும்.

ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்து நாம் அக்கறை கொள்ளாவிட்டாலும் பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் குற்றச்செயல்களை கையாள்வதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் கொண்டிருக்கவில்லை என  ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் பொதுச்  செயலாளர் டான்  ஹுவாட் ஹோக் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சனிக்கிழமை  பள்ளி முன்னாள் மாணவர் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட 18 வயது இளைஞர் தி.நவீன் கடந்த வியாழக்கிழமை  நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தார்.
இது குறித்து கருத்துரைத்த பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், பள்ளிக்கு அப்பாலும் மாணவர்கள் விஷயத்தில் பள்ளி பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

பள்ளிகளுக்கு வெளியே நடக்கும் பிரச்சினைகளில் குண்டர்கள், இரகசிய சங்கங்களைச் சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. இத்தகைய குற்றச் சம்பவங்கள் போலீசாரின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.

ஆசிரியர் என்போர், சட்ட அலமாக்க அதிகாரிகள் அல்லர். அவர்கள் குழந்தை பராமரிப்பாள்ர்களோ அல்லது சமுதாயத்திற்கு 'ஆலோசனை வழங்குபவர்களோ அல்லர்.


சமுதாயத்தில் நிலவும் தீமைகளுக்கு ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பள்ளிகள், பெற்றோர்கள், போலீஸ் மற்றும் சமூகம் என பல தரப்பட்டவர்களின் ஒத்துழைப்பும் இவற்றைக் களைய அவசியமாகிறது என்று டான் குவாட் ஹோக் சொன்னார்.

'அப்பா' தான் என் உலகம் - 5


16. எங்களின் முன்னேற்றம் 'தந்தை' - தர்ஷினி, சன் யோக் லிங், சன் முன் லீ, சன் யிங் யுன் 



எங்களது முன்னேற்றம், எங்களது கனவு, நாங்கள் வாழும் வாழ்க்கை ஒவ்வொன்றிலும் எங்களின் தந்தை சான் தய் லாய்  தியாகம் அடங்கியுள்ளது.

17.  இறைவன் தந்த வரம் 'அப்பா' - கோபி த/பெ குணசேகரன்


தினந்தோறும் பூத்துக் குலுங்கும் மலர்களைப் போல, மன மகிழ்ச்சிக்கு இறைவன் தந்த வரம் எனது 'அப்பா'.

18. மெழுகுவர்த்தியாய் 'தந்தை' - கண்ணா குடும்பத்தினர்


அன்பை உள்ளே வைத்து கொண்டு வெளியே மெழுகுவர்த்தி போல உருகும் ஒரே உறவு எங்கள் 'அப்பா'.

19. வரமாய் 'அப்பா' - சாதனா, ஆராதனா, லேஸ்னா.


கடவுள் கொடுத்த வரம் போல எங்கள் 'அப்பா' இளங்கோ கிடைத்துள்ளார்.

Monday, 19 June 2017

'அப்பா' தான் என் உலகம் - 4



12. வாழ்க்கையின் அர்த்தம் 'அப்பா' - கிவேன் ஸ்டெராணி விக்னேஸ்வரன்


எனது வாழ்க்கையின் அர்த்தம் என்றும் அப்பாதான். என் அப்பாதான் எனக்கு ஹீரோ.

13. ஆயுள் முழுக்க 'அப்பா' தான் - தட்சாயினி, தனேஷ், ரெஷ்மிதா


ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பாவை போன்ற உறவு எப்போதும் ஆயுள் முழுக்க வேண்டும். எங்கள் அப்பா திரு.பழனிக்கு 'தந்தையர் தின வாழ்த்துகள்'.

14. அம்மாவுக்கு அடுத்து 'அப்பா' - யசிதரன் குடும்பத்தினர்


அம்மாவுக்கு அடுத்து எங்களது தெய்வம் அன்பான அப்பா தான்.

15. தந்தை புகழ் பாட.... - விஷாலினி


ஓராயிரம் வரிகள் வேண்டாம் எனது தந்தையின் புகழ் பாட... ஒரு வார்த்தையில் சொல்கிறேன் எனது உயிர்நாடி எனது தந்தை திருமூர்த்தி ஆவார்.

'அப்பா' தான் என் உலகம் - 3


8. கரங்களை பிடித்து நடந்த ஆசான் - எம்.எஸ்.மணியம் குடும்பத்தினர்


எங்கள் கரங்களை பிடித்து 'இதுதாம்மா உலகம்' என்று அறிமுகம் செய்த ஆசானே இத்தரணியில் இறைவனால் எங்களுக்கு கிடைக்கப்பெற்ற பொக்கிஷம்  எங்கள் 'அப்பா'.

9. தன்னிலை இழக்காத 'தந்தை' - பா.கணேசன்


எந்த சூழ்நிலையிலும் தன்னிலை இழக்காமல் சகிப்புத் தன்மையுடனும் அன்புடனும் நடந்து கொள்ளும் ஜீவன், ஆசான், தோழன் எல்லாமே எங்கள் 'அப்பா' தான்.

10.  எனது 'ஹீரோ' அப்பா - கெவினேஷ்


எல்லோருக்குமே முதன்மை ஹீரோ அவர்களது அப்பா தான். அவ்வகையில் எனது ஹீரோவும் 'அப்பா' ரமேஷ் குமார் தான்.

11. அப்பா இல்லாத வலியை உணர்கிறோம்- ராஜன் வடிவேலு


எங்களுடன் நீங்கள் இல்லாத வலியை உணர்ந்து கொண்டே இன்னமும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

'அப்பா' தான் என் உலகம் - 2


4. தந்தையின் அன்பிலே எங்களது முன்னேற்றம்- சந்தியா, வினோத்


நான்  நினைத்த எல்லா விஷயங்களையும் கண் சிமிட்டும் நேரத்தில் கண் முன்னே நிறுத்தும்  எங்கள் தந்தை ரவீந்திரன், எங்களது முன்னேற்றத்தின் ஆசான் ஆவார்.

5. டாக்டர் பதவி 'தந்தை'யின் உழைப்பு- டாக்டர் நாகேஸ்வரி


இன்று நான் டாக்டராக உலா வருவதற்கு காரணம் என் தந்தை திரு.பாஸ்கரன் ஆவார். எத்தனை தோழன் இருந்தாலும் அத்தனை தோழனும் தோற்றுப் போகிறான் தந்தையின் முன்னே.

டாக்டர் நாகேஸ்வரியுடன் தனது தந்தைக்கு வாழ்த்து கூறுகிறார் கிருஷிலா நித்யாஷினி.

6.  கடவுள் உருவில் 'தந்தை' - டயானா டெ பவுல், வெவினா டெ பவுல்


கடவுள் எங்களது தந்தையின் உருவில் காண்கின்றேன்.  எங்களுக்கு எல்லாமே தந்தை லெட்சுமணன் தான்.

7. புகழ் பாட வார்த்தையில்லை - ரசிகா, பரணிதரன், ஆதித்தியன்


எங்கள் தந்தை திரு.முகிலனின் புகழ் பாட வார்த்தைகளே இல்லை.


'அப்பா' தான் என் உலகம் - 1



ஒவ்வொரு தந்தையருக்கும் தனது பிள்ளைகளே உலகம் ஆகும். அவர்களுக்காக ரத்தத்தையே வியர்வையாக சிந்தும் தந்தையரின் அர்ப்பணிப்புகள் சொல்லில் அடங்காதவை.

பிள்ளைகளுக்காக இரவு பகல் பாராமல் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வேண்டிய அனைத்தையும் செய்து வைக்கின்றனர்.

உணர்வுகளை வெளிகாட்ட தெரியாததால்தான் பலருக்கு தந்தையரின் அருமைகள் தெரியாமலே போய்விடுகிறது. ஆனால் எது நடந்தாலும் பிள்ளைகளுக்காக அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் கூட தனி சுகம் தான்.

அத்தகைய தந்தையருக்காக இன்று கொண்டாடப்படும் 'தந்தையர் தினம்' அவர்களது உலகத்தில் பிள்ளைகளால் அங்கீகரிக்கப்படுகின்ற 'வெற்றி விழா' ஆகும்.

தங்களது தந்தையரின் தியாகங்களை உணர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் பிள்ளைகளின் வாழ்த்து மடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

1. அர்ப்பணிப்பின் தியாகச் சுடர் 'தந்தை'- இளங்கோவன்


சுங்கை சிப்புட்  தோட்டப் புறத்தில் பிறந்து வளர்ந்து என்னை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து பல இன்னல்களையும் சமாளித்து, தனது கஷ்டங்கள், பணப் பிரச்சினைகள் அனைத்தையும் பார்க்காமல் சில சமயங்களில் ஊன் உறக்கம் இன்றி  இரவு பகல் பாராமல் இரு வேலைகள் செய்து, நான் கேட்கும் அனைத்தையும் வாங்கி தந்தார்.  இன்று நான்  மே வங்கியில் முதன்மை நிர்வாகியாக பதவியில் இருக்க காரணமே என் தந்தை திரு. அண்ணாமலையின் தியாகங்கள் தான் ஆகும்.


2. தாய்க்கு தாயாய் 'தந்தை' - பிரவீனா, நஷ்மிதா


தாய்க்கு தாயாய், தந்தைக்கு தந்தையாய், தோழனுக்கு தோழனாய் நம்முடன் வாழும் ஒரே ஜீவன்  தந்தை தான். அப்படிப்பட்ட தந்தையைதான் இறைவன் எனக்கு தந்துள்ளார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. எங்கள்  தந்தை திரு.சண்முகம்  தந்தையாக மட்டுமல்லாமல் அன்பு காட்டுவதில் அம்மா, பாசம் காட்டுவதில் அக்கா, கிண்டல் செய்வதில் தோழன், அறிவுரை வழங்குவதில் அண்ணன்  என உறவுகளை தன்னகத்தே கொண்டுள்ளார். 


3. 'தந்தையே' எங்களுக்கு உற்ற தோழன் - ஷேகிதா, சந்திரா, சூரியா, ஈஸ்வரர்


எங்கள் தந்தை திரு.கலைச்செல்வன் எங்களுக்கு உற்ற நண்பர். எங்களை எப்போதுமே மகிழ்ச்சியுடனும் எங்களின் அன்றாட வாழ்க்கையை அழகாக வடிவமைப்பார். அவரை சிறிது நேரம் பிரிந்திருந்தாலும் சோர்வடையும். பாசம் காட்டும் இத்தகைய 'அப்பா' கிடைக்கப்பெற்றதில் நாங்கள் பாக்கியசாலிகளே.

தொடரும் தந்தையர்களின் அர்ப்பணிப்பு....

Sunday, 18 June 2017

நவீனின் தாயாருக்கு வேலை வாய்ப்பு மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும்


ஜோர்ஜ்டவுன், ஜூன் 18-
பகடிவதை, சித்திரவதைக்கு உள்ளாகி மரணத்தை தழுவிய இளைஞர்  தி.நவீனின் மரணத்தைத்  தழுவிய தி.நவீனுக்கு நாடு தழுவிய நிலையில் அனுதாப அலை எழுந்துள்ள வேளையில் அவரின் குடும்பத்தை சூழ்ந்திருக்கும் சவால்களை களைய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூரில் உயர்கல்வியை பயில காத்திருந்த நவீனை பகடிவதை, சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்த சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

தனித்து வாழும் தனது தாயாருக்கு உதவியாக இருந்த நவீனின் மரணம் அவரது குடும்பத்திற்கு நிச்சயம் பேரிழப்பாகும்.  சாதாரண நிலையில் வாழ்ந்து வரும் இக்குடும்பத்திற்கு நவீன் நம்பிக்கையாக இருந்துள்ளார்.

'குடும்பத்தை சுமப்பான்' என்ற நம்பிக்கையில் அவனது தாயார்  டி.சாந்தி இருந்திருப்பார். ஆனால் தற்போது நவீன் மரணமடைந்துள்ளால் அக்குடும்பத்தில் எதிர்கால சவால்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.

ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நவீனின் தாயாருக்கு  மத்திய, மாநில அரசுகள்  ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மகனின் மரணத்தால் மன வேதனைக்கு உள்ளாகியுள்ள அவரின் தாயாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மனிதநேய அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என நேற்று நவீனின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறியபோது மணிமாறன் குறிப்பிட்டார்.

நவீனின் மரணத்திற்கு பிரதமர், மாநில முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினர் அனுதாபம் தெரிவித்துள்ள நிலையில் அவரின் துன்பத்தில் நாமும் கைகோர்த்துள்ளோம் என்பதை உறுதி செய்யும் வகையில் அவரது மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்திட வேண்டும் என்றார் அவர்.


மணிமாறனுடன் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரனும் நவீனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டார்.

கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் நவீன்



ஜோர்ஜ்டவுன் -
பகடிவதை, சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் மரணத்தை தழுவிய தி.நவீனின் (வயது 18) உடல் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன்  தகனம் செய்யப்பட்டது.

தனது பள்ளி மாணவர்களால் கடந்த சனிக்கிழமை பகடிவதை செய்யப்பட்ட நவீன் நேற்று மாலை 5.31 மணியளவில் பினாங்கு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நவீனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்ற வேளையில் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, மஇகா தேசிய பொருளாளர் டத்தோஶ்ரீ சா.வேள்பாரி, மகளிர், குடும்ப சமூகநல அமைச்சர் டத்தோ ரோஹானி, பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில மஇகா தலைவர்கள், அரசு சார்பற்ற பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த இளைஞனின் உயிரிழப்பு காரணமானவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும் என லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நடப்பதை முற்றாக ஒழிக்க வேண்டும். இதற்கு பெற்றோரும் பள்ளிகள், பொது இயக்கங்கள் ஆகியவை இணைந்து ஆகப்பூர்வமான திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என டத்தோஶ்ரீ வேள்பாரி தெரிவித்தார்.

பிற இடங்களிலிருந்து நவீனுக்கு அஞ்சலி செலுத்த பலர் அவரது இல்லத்திற்கு வந்திருந்தனர். அதோடு சமூக ஊடங்கங்களின் வாயிலாகவும் பலர் தங்களது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர்.

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் நவீனின் உடல் பினாங்கு பத்து கத்தோங்கில் தகனம் செய்யப்பட்டது.