Friday, 9 June 2017

Odyssey Training Academy Created A History!


Odyssey Training Academy students' hard work and efforts has been paid off as they successfully crafted their name in "MALAYSIAN BOOK OF RECORDS" title for the most number of music composers, singers and lyricists worked in one album recently. The certificate was handed over by the representative of MALAYSIAN BOOK OF RECORDS, Ayman Izzaz. The music training academy which was established on 2012 kick started the training class with 22 students in the first batch and gradually  increased to more than 66 students in its 9th batch. Odyssey Academy mainly focus on two systems of music which are known as carnatic music and light music.


     Recently, the chosen students of Odyssey Academy tried a new attempt to bring forward the Malaysian music industry to the next level by launching an album entitled "Homemade Melodies" comprises of 19 songs which has been composed, written and sung by the students itself. This lively event was held at Petaling Jaya Life of Arts Center on 27th of May at 3pm   witnessed by more than 500 audience.


     Besides, some of our country's important personalities joined together in this audio launch to celebrate the success of 66 students' effort. Among the main guests of this event are Malaysia's famous playback singer Datin Sri Shaila Nair, Dato Deepakaran, who is known as guardian of the Malaysian artists, Kapar's Parliament member Manivannan Govin, Dato Venugopal, Dato Sri Dr.Thinakaran Nair, Datin Sri Parameswari, Datin Jayanthi, and Uma Ramasany. Their presence in this event made the evening more memorable and meaningful for the students.

      In his speech, Music composer Jay who is also known as one of the founder of Odyssey academy stated that besides teaching their students about the vocal techniques and skills of singing, they also create an opportunity for the students to learn on the strategies to handle the music instruments and practiced them well to come out with their own song lyrics.

     He also strongly believes that their training academy never fail to guide their students on self learning which encourages their students to put their full effort on singing as well as give importance to the criteria to be followed in order to become a prominent singer.

      Thus, Odyssey Academy organised this wonderful event in order to showcase their students talent and give a recognition to their talents. It has been a great platform for the students which helped them to telecast their talents to the community as well as proofing themselves as a successful singer says Preetha Prasad, one of the tutor of Odyssey academy, who has been a part in this success.

     Thus, Odyssey Academy organised this wonderful event in order to showcase their students' talent and give a recognition to their talents. Not only that, it is undeniable that the opportunity given to the students had been a great platform for the students to telecast their talents to the community as well as proving themselves as a successful singer. The entire management of Odyssey Academy felt very happy and proud as they fulfilled their vision.


    It is must for all the students who undergoes training with Odyssey Academy to compose their own song with their own lyrics and sing the song in order to verify their knowledge towards the music industry as well as prepare themselves to face the real music industry.

      Their dream came true when they successfully united their 66 students from 9 batches to produce an album and it is considered as beyond the level. Declaring this training academy as the First Contemporary Training School in Malaysia to gather all of its students in one album was known as the prestigious moment for each and everyone who worked hard for it.


      Moreover, besides the launching of the album, they also successfully launched their Record Label called "Orange Box Studios". According to the Chief Executive Officer of Odyssey Academy Unni Krishnan, he stated that the main purpose of this record label is to manage the 19  songs and trademarks, coordinates the production, manufacture, distribution, marketing, promotion, and enforcement of copyright for sound recordings and music videos while conducts talent scouting and development of these upcoming new artists. The " Homemade Melodies " song album and the "Orange Box Studios" record label were launched by the special guests.

      The duration of each song in this album is for one to two minutes respectively. The songs from this amazing song album will be released in the YouTube and  online store soon. Furthermore, the CD of this album will be on sale nationwide for public purchase. The entire team also felt thankful to our local radios for their continuous support given to this album. The lively event was hosted by the THR Raaga's fame Kavimaran. He entertained the audience well with his host besides interviewing the 66 students regarding their experience working together as a team in an album. The entire team received a tremendous support from the audience. It was a great moment for each and everyone of them as they felt proud of their capability as a singer.

15.6 மில்லியன் மலேசிய ரசிகர்களுடன் ஆஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை


கோலாலம்பூர்-
அண்மையில், GfK நிறுவனம் மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை  கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. வாரந்தோறும் 77.விழுக்காடு அதாவது 15.6 மில்லியன் ரசிகர்கள் ஆஸ்ட்ரோ வானொலி கேட்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜேக் அப்துல்லா கூறுகையில், ஆஸ்ட்ரோ வானொலியைத் தொடர்ந்து முன்னிலை வகிக்க செய்த அனைத்து ரசிகர்களுக்கும் இந்த வேளையில் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதை வேளையில், எரா எஃப்.எம், ஹிட்ஸ் எஃப்.எம், மை எஃப்.எம் மற்றும் டி.எச்.ஆர் ராகா முறையே மலாய், ஆங்கிலம், சீன, தமிழ் மொழிகளில் தொடர்ந்து முதல் நிலை வானொலி நிலையம் எனும் இடத்தைப் பிடித்துள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

நம்  நாட்டின் முன்னணி தமிழ் வானொலியாக விளங்கும் டி.எச்.ஆர் ராகா வாரந்தோறும் 1.5 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டிலேயே தொடர்ந்து மிக அதிகமாக அதாவது 11 மணி நேரம் 23 நிமிடங்களாகக் கேட்கப்படும் வானொலியாக டி.எச்.ஆர் ராகா திகழ்கின்றது.
எங்களின் வானொலி தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் அதை வேளையில் எங்களின் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க டிஜிட்டல், சமூக வலைத்தளங்கள் சிறந்த ஒரு தளமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வானொலியில் மட்டுமின்றி டிஜிட்டல் வாயிலாகவும் உள்ளடக்கங்களைக் கொண்டு சேர்க்கின்றோம்.

மேலும், ரசிகர்களின் மத்தியில் ஆஸ்ட்ரோ வானொலியின் காலை நேர நிகழ்ச்சி நாட்டின் மிகப் பிரபலமான காலை நேர நிகழ்ச்சிகளாக விளங்குகின்றது. எங்களின் ஒன்பது வானொலி நிலையங்கள் வலைத்தளங்கள் மாதத்திற்கு 7.6 மில்லியன் மலேசியர்களால் பார்வையிடப்படுகின்றன. அதே நேரத்தில் டிஜிட்டல் வாயிலாக எங்கள் வானொலியைக் கேட்போர் 17 மில்லியன் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆஸ்ட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ganggai Amaran's " En Iniya Pon Nizhave" Musical Concert


 All seasons event management proudly organizing "En Iniya Pon Nizhave" musical concert by  South India's famous musical director and playback singer Ganggai Amaran.

      It is known that Mysuri Groups and Peri Event Management are being the main sponsors of this musical event. Moreover, this event which themed as "Isainyani Ilaiyaraga - Kalainyani Ganggai Amaran, will be held for the first time in our country, Malaysia.

       This lively event will be taking place at Midlands Convention Centre, Shah Alam on coming 29th of July at 7.30 in the evening.

        Not only that, many other famous playback singers and artists from India are expected to join together in this event.

        For further enquiries and details regarding the event, public are advised to contact the numbers stated below : 016-6191786 / 011-23888603.

கங்கை அமரனின் ‘என் இனிய பொன் நிலாவே'


ஆல்சீஸன் இவண்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாட்டில் தென்இந்தியா சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனின் ‘என் இனிய பொன் நிலாவே' எனும் இசை நிகழ்ச்சி நம் நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மைசூரி குழுமமும் பெரி இவண்ட் மேனேஜ்மென்ட்டும் இந்நிகழ்வின் முதன்மை ஆதரவாளர்கள் ஆவர். இந்நிகழ்வில், இசைஞானி இளையராஜா - கலைஞானி கங்கை அமரன் இசைப் பயணங்கள் எனும் கருப் பொருளோடு இந்த நிகழ்வு முதன் முறையாக மலேசியாவில்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி வருகின்ற ஜூலை 29ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த பல பாடகர்களும் சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து மேல் விவரங்களுக்கு, 016-6191786 அல்லது 011-23888603 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

அடையாள ஆவணங்கள் இன்றி 3 லட்சம் இந்தியர்களா? குற்றச்சாட்டை முன்வைக்காமல் பதிவு செய்யுங்கள்!


கோலாலம்பூர்-
3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இன்றி  நாடவற்றவர்களாக இருக்கின்றனர் என குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் நாடளாவியல் நிலையில் மேற்கொள்ளப்படும் மை டஃப்தார் நடவடிக்கையில் அவர்களை பதிவு செய்ய முன்வர வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

அடையாள ஆவணங்கள் இன்றி தவிக்கும் இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்கேற்ப மை டஃப்தார் பதிவு நடவடிக்கை கடந்த 5ஆம் தேதி தொடங்கப்பட்டு இதுவரை 6 இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த பதிவு நடவடிக்கையில் இதுவரை 493 பேர் நேரடியாக வந்து பதிவு செய்துள்ளனர் என இன்று கோலாலம்பூர் உள்துறை அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற மை டஃப்தார் நடவடிக்கையின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

அடையாள ஆவணங்கள் இன்றி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் சில தரப்பினர் 3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இன்றி தவிக்கின்றனர் என அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர்.

3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இன்றி தவிக்கின்றனர் என்பது உண்மையென்றால் மை டஃப்தார் நடவடிக்கையில் அவர்களை பதிவு செய்து அவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர  வெற்று அறிக்கைகள் விடக்கூடாது.

அதை விடுத்து பதிவு நடவடிக்கையெல்லாம் தவிர்த்து விட்டு மீண்டும் 3 லட்சம் இந்தியர்கள் அடையாள ஆவணங்கள் இல்லாமல் தவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது சரியானதல்ல என டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.


சுங்கை சிப்புட்டில் மீண்டும் தேவமணி?



சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி போட்டியிடக்கூடும் என பரவலாக பேசப்படுகிறது.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கிய டத்தோஶ்ரீ தேவமணி, அவரை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர் ஜெயகுமாரிடம் 2,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதனிடையே, 14ஆவது பொதுத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தொகுதியில் தேமு வேட்பாளராக களமிறக்கப்படுபவர் யார்? என்ற கேள்வி வலுத்து வருகிறது.
இந்த தொகுதியில் களமிறங்குவதாக பலரது பெயர் அடிபடுகின்ற நிலையில் தற்போது புதிதாக டத்தோஶ்ரீ தேவமணி பெயரும் அடிப்பட தொடங்கியுள்ளது.

டத்தோஶ்ரீ தேவமணியின் பெயர் அடிப்படுவதால் இரு வெவ்வேறான கருத்துகள் எழுகின்ற நிலையில் மக்களின் ஆதரவை தேவமணி பெறுவாரா? என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.

மிகப் பெரிய அரசியல் அடிச்சுவட்டை கொண்டுள்ள சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளராக மஇகாவின் தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோரின் பெயர்கள் அடிப்படுகின்ற சூழலில் இம்மண்ணின் மைந்தருக்கு இத்தேர்தலில் போட்டியிட ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பலம் பெற்று வருகிறது.

Thursday, 8 June 2017

சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை காப்பாற்றியவர் கர்ப்பால் சிங் – சிவநேசன்


ஷா ஆலம்-
வரலாற்றுமிக்கப் பழைமை வாய்ந்த சீபீல்ட் ஆலயத்தை காப்பாற்றவும் சட்டரீதியாக அதனை நிலநிறுத்தவும்பெருமுயற்சி எடுத்தவர்களில் ஒருவர் ஜனநாயக செயல் கட்சியின் தேசியத்தலைவரான அமரர் கர்ப்பால் சிங் என நினைவுறுத்தினார் சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன்.

1993இல் முறையாக செல்லப்பாவின் தலைமையில் பாழடைந்து கவனிப்பாரற்று இருந்த ஆலயத்தை ஆர்.ஒ.எஸ்.சில் பதிவுப்பெற்று மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கப்பெறச் செய்தவர் அவர்.

அக்காலக்கட்டத்தில் இந்த ஆலயத்தை பாதுகாக்க தவறிய மஇகாவும் அன்றைய மாநில தேசிய முன்னணி அரசும், இந்நிலத்தை தனியார் மேம்பாட்டு நிறுவனத்துக்கு விற்று ஆலயத்தை அகற்றவும் முயற்சிகளை மேற்கொண்டது.

அமரர் வழக்கறிஞர் கர்ப்பால் சிங் அவர்களின் துணையோடு கே.கே.செல்லப்பா மட்டும் அன்று வழக்கை தொடுத்திராமல் இருந்திருந்தால், இன்று இருந்த இடமே இல்லாமால் காணாமல் போயிருக்கும் சீபீல்ட் மாரியம்மன் ஆலயம்.

இன்று அந்த ஆலயத்தை உடைக்கக்கூடாது என்று நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறது மஇகா. மஇகாவின் தூண்டுதலின் பேரில் ஒரு கும்பலும், அரசு சார்பற்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் சேர்ந்து நான்கு குழுவாக இணைந்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதானது, இத்தனை ஆண்டுகாலமும் போராடி வெற்றிபெற்று கிடைத்த நன்மை யாருக்கும் பயனில்லாமல் பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும், என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.

புதிய இடத்திற்கு மாற்றம் காண முடியாது; இருக்கும் இடத்திலியே ஆலயத்தை நிலைநிறுத்துவோம் என்பதை அன்றே ஒற்றுமையாக இருந்து நீதிமன்றத்தின் வழி தீர்வை பெற்றுக் கொள்கிறோம் என உறுதியாக நின்றிருந்தால் இன்று ஆலயத்திற்கு இந்த நிலை வந்திருக்காது.

நாட்டில் காலந்தொட்டு பல ஆலயங்கள் இடமாற்றம் கண்டுள்ளது கண்கூடு. அதே போன்று ஒன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வழங்கியுள்ள நிலத்திலும் மிகப்பிரமாண்டமான ஆலயத்தை அம்மனுக்கு நாம் எழுப்பலாம். மேலும், ஆலயத்தில் அமைந்துள்ள பழங்கால அரச மரத்தை அழிக்காமல் பாதுகாக்க கலை, கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சு தூரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆலய விவகாரத்தில் அரசியல் தீய நோக்கோடு களம் காணும் தீய சக்திகளுக்கு நிச்சயமாக அந்த மதுராபதியின் காவல் தெய்வமான அம்மன் தக்க தண்டனை வழங்கி தண்டிப்பால் என்பது உறுதி என ஜசெகவின் பேராக் மாநில உதவித்தலைவர்களில் ஒருவரான சிவநேசன் கூறினார்.  

எழுத்து- சிவசீலன்

எதிர்க்கட்சியிடம் எதிர்காலத்தை அடகு வைக்காதீர் - பிரதமர் நஜிப் அறிவுறுத்து



தைப்பிங்-
இந்திய சமுதாயத்திற்கான எவ்வித திட்டங்களையும் கொண்டிருக்காத எதிர்க்கட்சியினரை நம்பி தங்களின் வாழ்வாதாரத்தை அடகு வைக்காதீர்கள் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.

ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்காக வியூக வரைவு செயல் திட்டம் (புளூபிரிண்ட்), மை டப்தார் உட்பட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


நாட்டின் தேசிய நீரோட்டத்தில் எந்தவொரு இனத்தையும் கைவிடாத தேசிய முன்னணி அரசாங்கம், இந்திய சமுதாயத்திற்கான செயல் திட்டங்களை முன்னெடுப்பதிலும் பின்வாங்கியதில்லை.

ஆனால் எதிர்க்கட்சியினரிடம் இந்திய சமுதாயத்திற்கான எந்தவொரு திட்டங்களும் வரையப்படாத நிலையில் அதனை நம்பி தங்களது எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தை இந்தியர்கள் அடகு வைத்து விடக்கூடாது.

'இந்திய சமுதாயத்திற்கான எந்தவொரு செயல்திட்டமாவது எதிர்க்கட்சியினரிடம் உண்டா?, எந்தவொரு செயல் திட்டமும் இல்லாத எதிர்க்கட்சியினரை இந்தியர்கள் ஆதரிப்பீர்களா?,  உங்களது அடுத்த தலைமுறையான பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எதிர்காலத்தை நினைவில் கொண்டு வரும் 14ஆவது  பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்' என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வலியுறுத்தினார்.


இங்கு தாமான் காயா தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு தளத்தை பார்வையிட்ட பின்னர் உரையாற்றிய டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன்,  பேராக் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், மாநில கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அமின்,  புக்கிட் கந்தாங் மஇகா தலைவர் சண்முகவேலு உட்பட அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Wednesday, 7 June 2017

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோரும் பங்கெடுக்க வேண்டும்!


சுங்கை சிப்புட்-
பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர் அவர்களுக்காக நடத்தப்படும் கருத்தரங்குகள், தன்முனைப்புத் தூண்டல் நிகழ்வுகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என மதிலன் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான யோகேந்திர பாலன் வலியுறுத்தினார்.

பிள்ளைகளில் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது அவர்களுடன் இணைந்து கல்வி நடவடிக்கைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும்.



அப்போதுதான் பிள்ளைகளும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தங்களது பெற்றோருடன் இணைந்து செயல்படுவர். ஆதலால் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.


அதேவேளையில் இத்தகைய நடவடிக்கையை 9 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின்  செயல்பாடுகளை வெகுவாக பாராட்டுவதாக  அண்மையில் இங்குள்ள வனத்துறை இலாகா மண்டபத்தில் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு யூபிஎஸ் ஆர் கருத்தரங்கு நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையில் யோகேந்திர பாலன் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு, இவ்வியக்கம் 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வேளையில் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டில் பல்வேறு நல்லுள்ளங்களின் உதவியோடு இந்த யூபிஎஸ்ஆர் வழிகாட்டி  கருத்தரங்கு நடத்தப்படுகிறது.


குறிப்பாக சங்கத்தின் ஆலோசகர் அமுசு பெ.விவேகானந்தன், மதிலன் நிறுவனத்தின் இயக்குனர் யோகேந்திர பாலன், சுங்கத்துறை இலாகாவின் துணை இயக்குனர் ஷமில் செல்வம் ஷா பின் அப்துல்லா, மருத்துவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பெருமளவு உதவிகளை வழங்கி வருகின்றனர். அவர்களின் பேராதரவு  சங்கத்தின் வளர்சிக்கு என்றென்றும் தேவை எனவும் சின்னராஜு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கோலாகங்சார் மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


சிறுமி மீது தாக்குதல்: வீடியோ பதிவாளர் மீதும் சட்டம் பாயுமா?


கோலாலம்பூர்-
சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும்  சிறுமியை தாக்கும் காணொளியில் இடம்பெற்ற மூதாட்டியை போலீஸ் கைது செய்துள்ள நிலையில் அதனை வீடியோவாக பதிவு செய்த நபர் மீதும் சட்ட நடவடிக்கை பாயுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

உணவை கீழே சிந்தியதற்காக  6 வயது சிறுமியை குச்சியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார் அவரின் பாட்டி என நம்பப்படும் மூதாட்டி. இந்த காணொளியை கண்ட சமூக பயனர்கள் கொதித்தெழுந்ததன் விளைவாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் அந்த மூதாட்டி.

ஆனால் இந்த விவகாரத்தில் தண்டிக்கப்பட வேண்டியது மூதாட்டி மட்டுமல்ல. சிறுமி கடுமையாக தாக்கப்படுவதை தடுக்காமல் அதை வீடியோ காட்சியாக பதிவு செய்த நபரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர் தான்.

2 நிமிடம் 49 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பதிவு செய்த நபரால் அந்த சிறுமி தாக்கப்படுவதை ஒரு நொடியில் தடுத்திருக்கலாம். ஆனால் சிறுமி தாக்கப்படுவதை தடுக்காமல் வீடியோ பதிவு செய்வதிலேயே மும்முரமாக இருந்த அதன் 'ஒளிப்பதிவாளரும்' தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியே.

சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை பேசியுள்ள வீடியோ காட்சியில் 'சிறுமி தாக்கப்படுவதை வீட்டில் வளர்க்கப்படும் நாய் கூட முயற்சி செய்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் சிறுமி தாக்கப்படுவதை தடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்காதது தண்டிக்கப்பட வேண்டியவர் தான் எனவும் அவர் மீதும் புகார் செய்யப்பட்டுள்ளது' எனவும் கூறியுள்ளார்.

தவறு செய்பவர் குற்றவாளி என்றால் அந்த தவறை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தவறுதான். ஆதலால் சிறுமி தாக்கப்பட்டதை வீடியோ காட்சியாக பதிவு செய்தவர் மீது சட்டம் பாய வேண்டும்.

அப்போதுதான் கண்முன்னே தவறு நடக்கும்போது அதை வீடியோவாக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தவறை தட்டிக் கேட்கும் மனிதநேயம் மிக்கவர்கள் உருவெடுப்பர்.

Tuesday, 6 June 2017

சிறுமியை தாக்கிய மூதாட்டிக்கு 7 நாட்கள் தடுப்பு காவல்!


கோலாலம்பூர்-
6 வயது சிறுமியை அடித்து துன்புறுத்திய இந்திய மூதாட்டிக்கு 7 நாட்களுக்கு தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சாப்பாட்டை கீழே சிந்தியதற்காக சிறுமியின் பாட்டி என நம்பப்படும் மூதாட்டி  முரட்டுத்தனமாகஅச்சிறுமியை குச்சியை கொண்டு கடுமையாக தாக்கும் வீடியோ காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து பூச்சோங்கிலுள்ள அந்த மூதாட்டி நேற்று இரவு கைது செய்யப்பட்ட வேளையில்   7 நாட்களுக்கு அந்த மூதாட்டி தடுத்து வைக்கப்படவுள்ளார்.

சமூக ஊடக பயனர்களிடையே ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த காணொளியின் விளைவாக பொதுமக்கள் அந்த மூதாட்டியின் வீட்டின் முன் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய சாதனை புத்தகத்தில் ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்கள் தடம் பதித்தனர்!



ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்களின் முயற்சியில் மிகச் சிறப்பாக உருவாக்கிய ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதித்து சாதனை செய்துள்ளது.

ஒடிசி இசை பயிலரங்கு மாணவர்களின் ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு இங்குள்ள பெட்டாலிங் ஜெயா, லைப் ஆர்ட்ஸ் மையத்தில் பிற்பகல் 3.00 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரையில் மிக பிரம்மாண்டமாக வெளியீடு கண்டது.


இந்நிகழ்விற்கு சிறப்பு பிரமுகர்களாக பின்னணி பாடகி டத்தின்ஸ்ரீ சைலா நாயர், கலைஞர்களின் காப்பாளர் டத்தோ டிபாகரன், காப்பார் சட்டமன்ற உறுப்பினர் மணிவண்ணன் கோவின், டத்தோ வேணுகோபால், டத்தோஸ்ரீ டாக்டர் தினகரன் நாயர், டத்தின்ஸ்ரீ பரமேஸ்வரி, டத்தின் ஜெயந்தி, உமா இராமசாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகரில் முதல் பிரிவில் 22 மாணவர்களுடன் தோற்றுவிக்கப்பட்ட ஒடிசி இசை பயிலரங்கு இன்று 9ஆவது பிரிவில் 66 மாணவர்களைக் கொண்டு கர்னாடக இசை, மெல்லிசை (Light Music) ஆகிய இரு வகையான இசைகளுக்கு  முக்கியத்துவமளித்து சிறப்பான முறையில் இசை வகுப்புகளை வழி நடத்தி வருகிறது.


ஒவ்வோர் இசைக் கலைஞனுக்கும் தேவையான இசை திறன்களையும் நுணுக்கங்களையும் சிறப்பான முறையில் கற்றுக் கொடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாணவரின் ஆர்வமும் பங்களிப்பும் அவர்களின் இசை பயிற்சிக்கு உறுதுணையாக உள்ளன. நாங்கள் ஒடிசியில் சுய பயிற்சி முறையை உருவாக்கி அதனை முறையாக மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து தக்க பயிற்சிகளை வழங்கி வருகிறோம். அதுதான் இன்று இந்த வெற்றிக்கு மைல்கல்லாக அமைந்துள்ளது என்று ஒடிசி இசை பயிலரங்கின் தலைமை பயிற்றுநரும் நாட்டின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஜெய் குறிப்பிட்டார்.

மாணவர்களைப் பாடுவதற்கு மட்டும் பயிற்சிகள் வழங்காமல் அவர்களை இசைத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக உருவாக்குவதற்காகவும் அவர்களுக்கு பாடல் எழுதும் பயிற்சிகள், இசைக் கருவிகள் பயன்படுத்தும் நுணுக்கங்களையும் போதித்து அவர்களைத் தயார் நிலைப்படுத்தியுள்ளனர். 


ஒடிசியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் பிரிவின் இறுதியில் தனது சுய முயற்சியில் பாடலை குழு அமைத்து அவர்களே பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து பாடி பாடலை உருவாக்க வேண்டும். இதன்வழி அவர்களின் கற்றல் கற்பித்தல்களை சோதனை செய்யவும் அவர்களைக் கலைஞர்களாக உருவாக்கவும் இயலும் என ஒடிசி இசை பயிலரங்கின் பயிற்றுநர்களில் ஒருவரும் பின்னணி பாடகியுமான பிரித்தா பிரசாத் தெரிவித்தார்.

இதனிடையே, உருவாக்கிய பாடல்களை ஓர் இசைத் தொகுப்பாக வெளியிட்டால் அவர்களின் படைப்புகளுக்கு ஓர் அங்கீகாரம் வழங்க முடியும். அதேசமயத்தில் அவர்களைக் கலைஞர்களாக அறிமுகப்படுத்தவும் முடியும் என்ற நோக்கத்தில் ஒடிசி பயிலரங்கின் நிர்வாகம் ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ எனும் இசைத் தொகுப்பை உருவாக்கியது. 

இந்த இசைத் தொகுப்பில் 9 பிரிவு மாணவர்களையும் ஒன்றிணைத்து அதில் 66 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து 19 குழுக்களாக பிரித்து அவர்களே சுயமாக பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து பாடியும் உள்ளனர்.  19 பாடல்களையும்  66 மாணவர்களையும் நிர்வகிப்பதற்கும் அவர்களுக்கான தளத்தையும் வாய்ப்புகளையும் அமைத்துக் கொடுப்பதற்காக “ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ்" எனும் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று ஒடிசி இசை பயிலரங்கின் தலைமை செயல் முறை அதிகாரி உன்னி கிருஷ்ணன் கூறினார்.

இந்நிகழ்வில் “ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ்” அதிகாரப்பூர்வமாக வருகையளித்த சிறப்புப் பிரமுகர்கள் தலைமையில் பிரம்மாண்டமாக வெளியீடு கண்டது. அதேவேளையில், ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பும் வருகையாளர்களின் முன்னிலையில் சிறப்பாக வெளியீடு கண்டது.



இந்த இசைத் தொகுப்பில் ஒவ்வொரு பாடலும் 1 நிமிடம் முதல் 2.30 நிமிடங்களுக்கிடையில் 19 பாடல்கள் உருவாகியது இந்த இசைத் தொகுப்பின் சிறப்பான அம்சமாகும். 

மேலும், ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு வலையொளியிலும் இணையத்திலும் வெளியீடு காணவுள்ளதாகவும் விரைவில் இணையதள அங்காடிகளில் விற்பனைக்கு வரவுள்ளது என்றும் “ஆரஞ்சு பாக்ஸ் ரெக்கோர்ட்ஸ்" தோற்றுநரும் இசையமைப்பாளருமான  ஜெய் தெரிவித்தார்.

இதற்கிடையில், ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு நேரடி விற்பனைக்கும் வரவுள்ளது. நாடு தழுவிய நிலையில் அதன் இசை முழங்கவுள்ளது. மேலும், உள்ளூர் வானொலிகள் தங்களது சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.


நாட்டில் முதல் முறையாக ஒரு இசை பயிலரங்கு தனது இசைத் தொகுப்பு வெளியீடுவதும் அதேவேளையில் அதிகமான இசைக் கலைஞர்களும் அதிகமான இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றிய இசைத் தொகுப்பாகும். ஆகையால், இதன் காராணமாகதான் ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது என்று மலேசிய சாதனை புத்தகத்தின் பிரதிநிதி ஐமான் இஷ்ஷாஸ் குறிப்பிட்டார்

ஒவ்வொரு மாணவரின் பாடல்களும் இந்நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டன. அதே சமயத்தில் அவர்களை நிகழ்வின் அறிவிப்பாளர் டி.எச்.ஆர் ராகா புகழ் கவிமாறன் நேரடியாக நேர்காணல் செய்து நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகர்களும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

சுங்கை சிப்புட் முதியோர் சமூகநல இயக்கத்தின் 10ஆம் ஆண்டு விழா


சுங்கை சிப்புட்-
முதியோர் நலன் காக்கப்படுவதற்கு ஏதுவாக தோற்றுவிக்கப்பட்ட சுங்கை சிப்புட் முதியோர் சமூக நல இயக்கத்தின் 10ஆம் ஆண்டு விழா அண்மையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பணி ஓய்வுக்குப் பின்னர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் முதியோரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வகையில் இந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என அதன் தலைவர் ராதாகிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்.

இவ்வமைப்பின் மூலம்  யோகா, சுற்றுலா, மருத்துவ முகாம், சமூகநல உதவிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முதியோர் என்றாலே அவர்களின் ஓய்வு நேரங்கள் தொலைகாட்சியிலேயே முழ்கி கிடப்பதை தவிர்க்கும் வகையில், இங்கு நாளிதழ் வாசிப்பது, யோகாசனம் மேற்கொள்வது, ஆரோக்கியம் குறித்த குறிப்புகளை தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கபடுகிறது.

தற்காலிகமாக வாடகை வீட்டில் செயல்படும் இவ்வியக்கம் சொந்த கட்டடத்தை பெறுவதற்கு எண்ணம் கொண்டுள்ளது. அதற்கேற்ப சிறு தொகை வங்கி கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லுள்ளங்கள் பெருமளவு உதவி புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



இந்த நிகழ்வில் டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், அமுசு பெ.விவேகானந்தா, தொகுதி மஇகா தலைவர் இளங்கோ முத்து, செயலாளர் கி.மணிமாறன், குருக்கள் ரத்னம், அமுசு ஏகாம்பரம் உட்பட பல்வேறு வர்த்தகர்களும் அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.