கிள்ளான்-
இறைவன் இல்லம்
கலை, கலாச்சார, கல்வி இயக்கத்தில் ஏற்பாட்டில் ‘இறைவன் இல்லம்’ பக்தி பாடல்கள் அடங்கிய
குறுந்தட்டு அண்மையில் மிகச் சிறப்பாக வெளியீடு கண்டது.
இறைவன் இல்லம் இயக்கத்தின் நிறுவனர் சி.கைலாசம் இந்த குறுந்தட்டை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ சத்குரு ஸ்ரீ ஜெயபிரகாஷேந்திரா சரஸ்வதி மகாசுவாமிஜி 'இறைவன் இல்லம்' குறுந்தட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்து சமயம் மீதான பற்று இன்றைய இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் நிலையில் அதனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவே இந்த இசை குறுந்தட்டு வெளியிடப்படுகிறது.
இந்த குறுந்தட்டை வெளியிட வேண்டும் என்று கடந்த ஈராண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறிய அவர், இசையமைப்பாளர் தீபனின் பேருதவியோடு இந்த இசை குறுந்தட்டு உருவாக்கம் கண்டது என்றார்.
‘இறைவன் இல்லம்’ இசை குறுந்தட்டில் இடம்பெற்றுள்ள 10 பாடல்களையும் தானே எழுதியுள்ள கைலாசம், ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
'இறைவன் இல்லம்' பக்தி பாடல்கள் தொடர்பில் கருத்துரைத்த இசையமைப்பாளர் தீபன், இந்த இசை குறுந்தட்டை வெளியிட வேண்டும் என்ற கைலாசத்தின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்கள் அமைந்துள்ளன.
இதில் இசை குறுந்தட்டில் புகழ் பெற்ற பாடகர்களான வீரமணிதாசன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், திலீப் வர்மன், ஆனந்தா ராஜாராம், அபிராமி, பரிமளா தேவி ஆகியோர் பாடியுள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்த இசையமைப்பாளர் தீபன், சமயத்தின் மீது இளைஞர்கள் பற்று கொள்ள வேண்டும் எனும் நோக்கில் 'இறைவன் இல்லம்' குறுந்தட்டுக்கு தயார்செய்யப்பட்டதாக கூறினார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் வணிக பெருமக்களும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment