Thursday, 30 July 2020
பிஎன் கூட்டணியிலிருந்து அம்னோ விலகியது
Wednesday, 29 July 2020
மூன்று துறைகளில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி
வங்கிக் கடன் செலுத்தும் தவணைக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு- பிரதமர்
SOP-ஐ பின்பற்றாத நஜிப் ஆதரவாளர்கள்; கோவிட்-19 பரவல் அதிகரிக்குமா? பீதியில் மலேசியர்கள்
சட்டம் நடுநிலையாக செயல்படுகிறது- பிரதமர்
கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர்
டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்துறை
நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதை புலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் டான்ஶ்ரீ
முஹிடின் யாசின் தெரிவித்தார்.
தனது நண்பருக்கு
எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனை வேதனை அளிப்பதாக உள்ளது. ஆனாலும் பெரிக்காத்தான் நேஷனல்
ஆட்சியில் சட்டம் நிலைநாட்டப்படுவது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
ஆயினும் டத்தோஶ்ரீ நஜிப் இத்தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யவிருக்கும் முடிவை அரசாங்கம் மதிக்கிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயல்படுகிறது என்பதை புலப்படுத்தும் வகையில் அனைவருக்கும் வழிவிடப்படுகிறது என்று அவர் சொன்னார்.
தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது; நஜிப் ஆதங்கம்
கோலாலம்பூர்-
எஸ்ஆர்சி நிறுவனம்
தொடர்புடைய வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும் ஊழல்
குற்றச்சாட்டில் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்கு தொடர்ந்து போராட்டம்
நடத்தவிருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நீதிமன்ற வளாகத்தில்
தெரிவித்தார்.
எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்பில் தமது தரப்பு சார்பாக வாதிட்ட
டான்ஶ்ரீ ஷாபி, வழக்கறிஞர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வாதிட்ட போதிலும் அதனை நிராகரித்து
விட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது. இருந்த போதிலும் மேல் முறையீட்டு
நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன் என்று அவர் சொன்னார்.
கூடிய விரைவில்
தமது தரப்பு வாதத் தொகுப்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும்
தமது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிவேன் என்று நீதிமன்றத்தில் திரண்டிருந்த
100க்கும் மேற்பட்ட உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு
கூறினார்.
இதற்கு முன்னதாக
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி மோசடி, கள்ளப்பணம் பரிமாற்றம், அதிகார துஷ்பிரயோகம்
ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப்புக்கு
12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வெ.210 மில்லியன்
அபராதமும் வழங்கி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
டத்தோஶ்ரீ நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை; வெ.210 மில்லியன் அபராதம்
கோலாலம்பூர்-
வெ.42
மில்லியன் வெள்ளி மோசடி நிகழ்த்தப்பட்ட எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முன்னாள் பிரதமர்
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பில்
ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் 72 ஆண்டுகள் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டது.
ஆயினும்
இச்சிறைத் தண்டனை ஒருசேர விதிக்கப்படுவதால் 12 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் கூறினார்.
மாதத்திற்கு
இரு முறை காவல் நிலையத்தில்
டத்தோஸ்ரீ நஜிப் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெ.
20 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி
வெளியேறினார்.
மேல்முறையீட்டு
நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் டத்தோஶ்ரீ நஜிப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக
தொடர்வார் என கூறப்படுகிறது.
Tuesday, 28 July 2020
தேர்தலில் போட்டியிடலாம்; வாக்களிக்கலாம்- மேல் முறையீட்டு வழக்கில் டத்தோ சிவராஜ் வெற்றி
சமூக இடைவெளியை கடைபிடிக்காத நஜிப் ஆதரவாளர்கள்-டத்தோ நோர் ஹிஷாம் வேதனை
நஜிப் குற்றவாளியே- நீதிமன்றம் தீர்ப்பு
Monday, 27 July 2020
மலைப்படி மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு இரு பரிந்துரைகள் முன்மொழிவு- கணபதிராவ்
ரா.தங்கமணி
ஷா ஆலம்-
ஷா ஆலம், செக்ஷன்
11இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா ஆலயம் (மலைப்படி மாரியம்மன்) ஆலயம் அகற்றப்பட வேண்டும் என்ற
விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய நில அலுவலகத்திடம்
வலியுறுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.
இவ்வாலயம் விவகாரம்
தொடர்பில் மத்திய நில அலுவலகம், ஆலய தரப்பு உட்பட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய கலந்துரையாடல்
நடத்தப்பட்டது.
150 ஆண்டுகால
வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வாலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்காக
இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
முதலாவதாக,
ஆலயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அருகிலுள்ள பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளை
மேற்கொள்ளலாம். இரண்டாவதாக ஆலயத்தை அகற்றுவற்கு முன்னர் வேறு இடம் ஆலயத்திற்கு (செக்ஷன்
11இல் மட்டும்) மாற்று நிலம் ஒதுக்கப்பட வேண்டு என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நாடு சுதந்திரம்
அடைவதற்கு முன்னரே தோட்டப்புற இந்தியர்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்த ஆலயம் வெறுமனே
அகற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தமாக
தெரிவிக்கப்பட்டது.
இந்த மாரியம்மன்
ஆலய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணவே அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர்.
இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முற்பட வேண்டாம், ஆலயம், தமிழ்ப்பள்ளி, சமூகம் சார்ந்த
பிரச்சினைகளுக்கு கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்
என்று கணபதிராவ் குறிப்பிட்டார்
செக்ஷன்
11இல் அமைந்துள்ள மலைப்படி மாரியம்மன் ஆலயம் அந்நிலத்திருந்து அகற்றப்பட வேண்டும் என்று
அண்மையில் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.



















