Sunday 15 December 2019

‘மைசெல்’ முயற்சியில் மூவருக்கு அடையாள அட்டை பெற்று தரப்பட்டது

ஷா ஆலம்-
மைசெல் மூலமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.
25 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு பிறகு தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் அடையாள அட்டை கிடைக்க உதவியதற்காக சிலாங்கூர் மாநில அரசுக்கும் ,சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ,கணபதி ராவுக்கும் இவ்வேளையில் மனபூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக அப்பிள்ளைகளின் தந்தை சேகரன் தெரிவித்தார்.

தனராஜ் சேகரன் 24 வயது ,கீதா சேகரன் 16 வயது  ஆகிய இருவருக்கும் இம்முறை குடியுரிமை கொடுத்திருப்பதுடன் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் உத்தரவாத கடிதத்தையும் உள்துறை அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொண்ட பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளி நாட்டவரை மணந்துக்கொண்ட பிறகு மூன்று பிள்ளைகள் பிறந்ததாகவும்,முறையான திருமண பதிவு இல்லாத காரணத்தால் மூன்று பிள்ளைகளும் குடியுரிமை அற்றவர்களாக இத்தனை ஆண்டுகள் தவித்ததாகவும் பல முயற்சிகள் மேற்கொண்டும் தங்களின் விண்ணப்பங்கள் பல முறை நிராகரிக்கப்பட்டதும் மன வேதனையுடன் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையுடன் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இறுதியாக மைசெலின் உதவியை நாடியதாகவும் ஒரு முறை அவர்கள் எங்களை உள்துறை அமைச்சின் அதிகாரிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்ததுடன் எங்களின் ஆதங்களை அவர்களி இடத்தில் தெரிவிக்கும் வாய்ப்பு கிட்டியதாகவும் எங்களின் கவலைகளை புரிந்துக்கொண்ட அவர்கள் எங்களின் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே மைசெல் அதிகாரிகள் சில கலந்துரையாடல்களை உள் துறை அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தியதுடன் இறுதியாக இரண்டு பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன் மற்றொரு பிள்ளைக்கு அடுத்த ஆண்டு குடியுரிமை வழங்கப்படும் என்றும் அவர் மகிழ்ச்சியிடன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பு பிரிவாக இயங்கும் மைசெல் என்னும் பிரிவு வீ.கணபதிராவின் நேரடி பார்வையின் கீழ் செயல்ப்படுகின்றது அப்பிரிவு அடையாள அட்டை பிரச்சினை,பிறப்பு பத்திரம்,குடியுரிமை போன்ற பிரச்சினைகளை உள்துறை அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முறையிலும் தீர்வுகளை கண்டு வருவதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வையும் அது வழங்கி வந்துள்ளது.

No comments:

Post a Comment