Wednesday, 13 December 2017
அரச விருதுகளை திரும்ப ஒப்படைத்தார் துன் மகாதீர்- சிலாங்கூர் அரண்மனை உறுதிப்படுத்தியது
ஷா ஆலம்-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் அவரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா ஆகியோர் இரு அரச விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளை சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி இவ்விருவரும் தங்களது அரச விருதுகளை திருப்பிக் கொடுத்துள்ளதை சிலாங்கூர் அரச மன்ற செயலாளர் ஹனாஃபிசா ஜாய்ஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
உரிய நடைமுறைகள் பின்பற்றி இவ்விரு அரச விருதுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
பிரிபூமி கட்சியின் தலைவரான மகாதீர் உயரிய அரச விருதான ஶ்ரீ படுக்கா மக்காமா சிலாங்கூர் (எஸ்பிஎம்எஸ்), டர்ஜா கெராபாட் ( டிகே) ஆகிய விருதுகளையும் டாக்டர் சித்தி ஹஸ்மா உயரிய அரச விருதான டத்தோ படுக்கா மக்கோத்தா சிலாங்கூர் (டிபிஎம்எஸ்),( எஸ்பிஎம்எஸ்) ஆகிய விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.
'பெர்டானா' இளம் தொழில்முனைவர் விருதை பெற்றார் ரகுநாதன்
ஈப்போ-
மலேசிய இந்திய தொழில்முனைவர் கழகத்தின் 'பெர்டானா' இளம் தொழில் முனைவர் விருதை பெற்றார் ரகுநாதன் பெருமாள்.
ஃபைபெர் நெட்வோர்க் (Fiber Network) தொலைதொடர்பு நிறுவன நிர்வாக இயக்குனரான இவருக்கு அண்மையில் இவ்விருது வழங்ஜப்ப்பட்டது.
இந்த விருதை பெற்றுக் கொண்ட ரகுநாதனுக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். ரகுநாதன் மஇகா கோப்பெங் தொகுதியின் பொருளாளருமாவார்.
விருது பெற்ற ரகுநாதனுக்கு சக இயக்குனர்களான வெங்கா கருப்பையா, மதுரைவீரன், மாரிமுத்து ஆகியோர் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர்.
40க்கு மேற்பட்ட யூ.பி.எஸ்.ஆர் மாணவர்கள் லம்போர்ஜினி வாகனத்தில் பயணம்
கோலாலம்பூர்-
அண்மையில் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையம் ஏற்படுத்தி தந்துள்ளது. அம்மாணவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் லம்போர்ஜினி வாகனத்தில் பயணக்கும் வாய்ப்பை வழங்கியது.
சுமார் 30க்கு மேற்பட்ட லம்போர்ஜினி வாகனத்தின் உரிமையாளர்கள் அம்மாணவர்களை ஏற்றி ஆஸ்ட்ரோ வளாகத்திலிருந்து சைபர் ஜெயா வரை 25 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டார்கள்.
டி.எச்.ஆர் ராகாவின் தலைவர், சுப்ரமணியம் வீரசாமி கூறுகையில், “இந்த மாணவர்கள் தங்களுடைய யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளார்கள். அவர்களது சாதனைகளைப் பார்க்கும் பெருமையாகவுள்ளது. எனவே, இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் டி.எச்.ஆர் ராகா குழுவினர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த லம்போர்ஜினி வாகனத்தின் பயணம் அவர்களுக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்”.
இப்பயணத்தில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் உதயா, ரேவதி, அகிலா, சுரேஷ், கீதா, கவிமாறன், யாசினி, ஜெய் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த லம்போர்கினி பயணத்தில் பங்கேற்க அதிகமான மாணவர்கள் raaga.fm எனும் டி.எச்.ஆர் ராகா அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திற்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். அவற்றுள் 42 மாணவர்கள் மட்டுமே ஏற்பாடு குழுவினர் தேர்ந்தெடுத்தார்கள்.
பள்ளி உபகரணப் பொருட்கள் அன்பளிப்பு - கூ.பிரதேச மைபிபிபி கட்சியின் சமூக கடப்பாடு
கோலாலம்பூர்-
கூட்டரசுப் பிரதேச அறவாரியத்தின் 'செரியா கெ செகோலா' (Ceria ke Sekolah) எனும் திட்டத்தின் வழி, கூட்டரசுப் பிரதேச மைபிபிபி அம்மாநிலத்தைச் சேர்ந்த 400 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணப் பொருட்களை வழங்கியது.
கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள வசதி குறைந்த மாணவர்களை அடையாளம் கண்டு புத்தகப் பை உள்ளிட்ட 100 வெள்ளி பெருமானமுள்ள பற்றுச் சீட்டையும் வழங்கியது. இந்தப் பற்றுச் சீட்டைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பள்ளி உபகரணப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
கூட்டரசுப் பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்ட தேசிய முன்னணி அரசாங்கம் தனது கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை. அந்த வகையில், பள்ளி தவணை தொடங்கும் முன்னதாகவே கோலாலம்பூர் வாசிகளுக்கு இதுபோன்ற உதவிகள் கை கொடுக்கும். இதனைக் கருத்தில் கொண்டுதான் 'செரியா கே செகோலா' எனும் திட்டம் தொடங்கப்பட்டது.
கோலாலம்பூர் மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மைபிபிபி உதவித் தலைவர் டத்தோ ஸக்காரியா, இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன், தேசிய தகவல் பிரிவுத் தலைவர் சைமேன் சுரேஸ் ஆகியோருடன், கூட்டரசுப் பிரதேச பள்ளிகளின் கல்வி பிரிவு பொறுப்பாளர் ஸரூல் மஸ்லான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனிடையே, கல்வியின் வழி சிறந்த மாணவர் என்ற நிலையை அடைந்து குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் ஆலோசனை கூறினார்.
ஏழ்மையாக வாழும் குடும்பத்தின் நிலையை மாற்றுவது மாணவர்களின் கையில் இருக்கிறது. அதே மாணவர்கள் எதிர்நோக்கும் ஏழ்மை நிலைக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேவேளையில், கிடைக்கும் உதவிகளை நன்றாகப் பயன்படுத்தி மாணவர்களுக்குத் தேவையானவற்றை வழங்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
அண்மையில் இங்குள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் நடைபெற்ற 'செரியா கே செகோலா' எனும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு சொன்னார்.
மொத்தமாக 60,000.00 வெள்ளி மதிப்பிலான புத்தகப் பைகளும் 100.00 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளும் சுமார் 400 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விலாயா மாநில அமைச்சர் டத்தோஶ்ரீ பங்ளிமா தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இதுபோன்ற உதவிகள் நிச்சயம் அவர்களின் சுமையைக் குறைக்கும் என்பது திண்ணம். விலாயா மாநிலத்திலுள்ள குடும்பங்களின் மீது தேசிய முன்னணி அரசாங்கம் கவனம் கொள்கிறது என்பதும் இதன்வழி புலப்படுகிறது எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.
Tuesday, 12 December 2017
உடைந்தது 'பாண்டவர் அணி'; பொன்வண்ணன் ராஜினாமா
சென்னை-
நடிகர் சங்கத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை கூட்டி வரும் நிலையில் அச்சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் விலகியிருப்பது மேலும் பரபரப்பை எகிறச் செய்துள்ளது.
நடிகர் சங்கத்திலிருந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரை நடிகர் விஷால் களத்தில் குதித்து வரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்ததிலிருந்து சினிமா உலகைச் சேர்ந்த சிலர் விஷாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளட்ர் சங்கப் பொதுக்குழு கூட்டம் தொடங்கிய சில மணிநேரத்தில் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து நடிகர்கள் சேரன், டி.ராஜேந்தர், சுரேஷ் காமாட்சி ஆகியோர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலின்போது விஷாலின் 'பாண்டவர் அணி'யில் இணைந்து பொன்வண்ணன் போட்டியிட்டார்.
பொன்வண்ணனின் ராஜினாமாவினால் 'பாண்டவர் அணி' உடைந்துள்ளது.
'துன்' என விமர்சித்தது மகாதீரை மட்டுமே; சாமிவேலுவை அல்ல - டத்தோஶ்ரீ தேவமணி
தங்கமணி
கோலாலம்பூர்-
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவை பற்றி தமிழழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மஇகாவின் தேசிய துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி விவரித்துள்ளார்.
'சாமிவேலு தலைமைத்துவத்தில்தான் உரிமைகளை இழந்தோம்' எனும் தலைப்பில் வெளிவந்த அச்செய்தியில் என்னுடைய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சாடி நான் கூறிய கருத்து தவறாக பிரசுரிகப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ள தேவமணி, சம்பந்தப்பட்ட அந்நிகழ்வில் மகாதீர் காலத்தில் இந்தியர்களுக்கான இந்தியர்களுக்கான சிறப்பு திட்டங்களோ இல்லாததை தொட்டு பேசினேன். 'துன்' என நான் மகாதீரை குறிப்பிட்டேனே தவிர 'துன்' சாமிவேலுவை அல்ல. இதனை மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ ந.முனியாண்டி, டத்தோ எஸ்.எம்.முத்து ஆகியோர் உறுதிபடுத்தியுள்ளனர்.
தவறாக பிரிசுரிக்கப்பட்டுள்ள செய்தியால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில் இதுபோன்ற தகவல்கள் சமுதாயத்தின் நம்பிக்கையை சீர்குலைப்பவையாகும்.
மஇகாவின் மூலம் சமுதாய சேவைகளுக்கு என்னை அறிமுகம் செய்தவர் துன் சாமிவேலு ஆவார். எனது அரசியல் ஆசானாக இருந்து வழிகாட்டும் துன் சாமிவேலு இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவையாகும் என டத்தோஶ்ரீ தேவமணி தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, 11 December 2017
ஜசெகவில் இல்லை 'இனவாதம்'; அம்னோ, மசீச, மஇகா மட்டுமே...- சிவகுமார் ஆவேசம்
புகழேந்தி
ஈப்போ-
சீனர்களை அதிக உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) இனவாதக் கட்சி என்றால் ஓர் இனத்தை மட்டுமே அடிப்படையாக் கொண்டு செயல்படும் அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் 'பல இனக் கட்சிகளா? என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
ஜசெக (டிஏபி) ஓர் இனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படவில்லை. அனைத்து இன மக்களையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள பல இன கட்சி. இக்கட்சியின் சட்டவிதிகளிலே அனைத்து இனத்தவர்களும் உறுப்பினர்களாக சேரலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் காலங்களின்போதெல்லாம் ஜசெகவை இனவாதக் கட்சி என முத்திரை குத்தும் அம்னோ, முதலில் தனது கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை உணர வேண்டும்.
தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இருக்கின்ற அம்னோ, மசீச, மஇகா ஆகிய மூன்று ஓர் இனத்தை சார்ந்தோரை மட்டுமே உறுப்பினராக கொண்டு செயல்படுகிறது. ஓர் இனத்தின் அடிப்படையில் செயல்படும் இம்மூன்று கட்சிகளுமே இனவாத கட்சிகளாகும்.
ஜசெகவை பிரதிநிதித்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் மலாய்க்காரர், இந்தியர், சீனர்கள் போட்டியிட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். கட்சியின் மத்திய செயலவையில் கூட சீனர்களை தவிர்த்து பிற இனத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
அதேபோன்று, அம்னோ முஸ்லீம் அல்லாதவர்களை சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளராக களமிறக்கியுள்ளதா?, மசீசவும் மஇகா தான் இனத்தைச் சாராத பிற இனத்தவர்களை தேர்தலில் களமிறக்கியுள்ளதா? கட்சியின் மத்திய செயற்குழுவிலாவது இடம் கொடுத்துள்ளனரா?
பிற இனத்தவர்களுக்கு வாய்ப்பளிக்காத இம்மூன்று கட்சிகள்தான் இனவாத கட்சிகள் ஆகும். தேர்தல் நேரங்களில் மலாய்க்காரர்களின் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக ஜசெகவை 'இனவாத கட்சி' என முத்திரை குத்த வேண்டாம் என பேராக் மாநில நம்பிக்கைக் கூட்டணியின் செயலாளருமான சிவகுமார் வலியுறுத்தினார்.

மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் - அ.சிவநேசன்
(புகழேந்தி)
சுங்கை சிப்புட்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றால் அங்கு நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது முதல் கடமையாகு என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. கட்சி தலைமைத்துவம் முடிவு செய்தால் கண்டிப்பாக வேட்பாளராக களமிறங்குவேன்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினேன். இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அங்கு நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது பணி என வாக்குறுதி அளித்தேன்.
அதேபோல் வெற்றி பெற்று மாநில அரசையும் கைப்பற்றி பக்காத்தான் கூட்டணி ஆட்சியமைத்தபோது அங்கு ஏற்பட்ட வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கண்டேன்.
அதேபோன்று சுங்கை சிப்புட் மக்கள் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அங்கு நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண்பேன் என் சிவநேசன் குறிப்பிட்டார்.
அண்மைய காலமாக சுங்கை சிப்புட் வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சினை தலைதூக்கவதோடு அதனால் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
Sunday, 10 December 2017
மண்டை ஓடும், எலும்புகளும் கண்டெடுப்பு
சிரம்பான் -
ஓர் உணவகத்தின் அருகில் மனித எலும்பும் மண்டை ஓடும் இருப்பதை கண்ட இளைஞர் அதிர்ச்சிக்குள்ளானார்.
இது குறித்து கருத்துரைத்த சிரம்பான் வட்டார போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் சுலிஸ்மீ அஃபெண்டி சுலைமான், பிற்பகல் 2.30 மணியளவில் இப்பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொண்டபோது சம்பந்தப்பட்ட இளைஞர் மண்டை ஓட்டை பார்த்துள்ளார்.
இது தொடர்பில் கே9 பிரிவினர் களமிறங்கி சோதனை மேற்கொண்டனர்.
இப்பகுதியில் எவ்வித ஆயுதங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் எவ்வித துர்நாற்றத்தையும் தாங்கள் இதுவரை உணர்ந்ததில்லை என இங்கு பணியாற்றுபவர்கள் தெரிவித்தனர்.
தற்போது வரை இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
பாம்பு தொல்லை: 1,773 புகார்கள் பெறப்பட்டுள்ளன
ஈப்போ-
பாம்பு தொல்லை தொடர்பாக இவ்வாண்டு தொடக்கம் கடந்த நவம்பர் மாதம் முதல் 1,773 புகார்கள் பெறப்பட்டதாக கிந்தா வட்டார மலேசிய பொது தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
பிற புகார்களை காட்டிலும் பாம்புகளை உள்ளடக்கிய புகார்களே அதிகம் உள்ளதாகவும் ஒவ்வொரு மாதமும் 150 புகார்களுக்கு மேல் பெறப்படுவதாக அதன் பேரிடர், நடவடிக்கை அதிகாரி லெப்டினன்ட் ரெய்னர் சைமன் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அதிகமான புகார்கள் கிடைக்கப்பெறும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 201 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமை 2 வயது சிறுவனை நாகம் தீண்டியது. பெர்ச்சாம், பண்டார் பாரு புத்ராவில் கிடைக்கப்பெற்ற இப்புகாரே சிறுவனை பாம்பு தீண்டியது தொடர்பான முதல் புகாராகும்.
தங்களது குடியிருப்புப் பகுதி தூய்மையாக பராமரிக்கப்படாத நிலையில் விஷ ஜந்துக்களின் தீண்டல் சம்பவங்கள் இடம்பெறலாம் என்றார் அவர்.
கடந்த திங்கட்கிழமை காலை 7.15 மணியளவில் மெத்தை மீது படுத்திருந்த சிறுவன் முகம்மட் இஸ்ஃபயாட்டை 0.9 மீட்டர் நீளம் கொண்ட நாகம் தீண்டியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட இந்தியப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
கிள்ளான் -
மூன்று ஆடவர்களால் கடத்தப்பட்ட இந்திய மாது ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று ஒரு தொழிற்சாலையின் முன்பு மூன்று ஆடவர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்ட எஸ்.ஜோதிமணியை (வயது 49) இரவு 10.00 மணியளவில் போலீசார் மீட்டனர் என அவரின் சகோதரி எஸ்.சத்தியா கூறினார்.
ஜோதிமணியை கண்ட போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடம்பில் காயங்கள் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
சகோதரியை கடத்திய நபர்கள் அவரின் நகைகளை கொள்ளையிட்டு தனியே விட்டுச் சென்றுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
நேற்றுக் காலை 9.30 மணியளவில் கம்போங் ஜாவாவிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் முன்பு பொருட்களை சேகரிப்பதற்காக வந்த ஜோதிமணியை மூன்று ஆடவர்கள் காரில் கடத்திச் சென்றனர்.
Saturday, 9 December 2017
இரு முதன்மை பதவிகளுக்கு 'அம்னோவில்' போட்டியில்லை
கோலாலம்பூர்-
அம்னோவின் இரு முதன்மை பதவிகளுக்கு போட்டியில்லை என தற்போது நடைபெற்று வரும் அதன் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வரும் கட்சி தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டி நிலவக்கூடாது என அம்னோ இளைஞர் பிரிவு முன்வைத்த கோரிக்கையை பேராக் பிரதிநிதி வழிமொழிய கட்சியின் நிரந்தர தலைவர் டான்ஶ்ரீ பட்ருடின் அமிருல்டின் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நமது பலத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக கட்சி சட்டவிதிகளின் 5ஆவது பிரிவின்படி இந்த பரிந்துரையை முன்மொழிவதாக இளைஞர் பிரிவு கூறியுள்ளது.
இதன்படி கட்சியின் நடப்புத் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், கட்சியின் இடைக்கால துணைத் தலைவரும் (உதவித் தலைவர்) துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி ஆகியோர் கட்சியின் தேர்தலில் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனrர்.
ஆகக் கடைசியாக அம்னோ கட்சியில் 1987ஆம் ஆண்டு தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது. அப்போது துன் மகாதீர் முகம்மதுக்கும் தெங்கு ரஸாலிக்கும் இடையே நிலவிய இப்போட்டியின் விளைவாக அம்னோ இரண்டாக பிளவுப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த முதன்மை பதவிக்கு 2013இல் டத்தோஶ்ரீ நஜிப்பை எதிர்த்து தெங்கு ரஸாலி போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் வேட்புமனுவின்போது தனது வேட்புமனுவை தெங்கு ரஸாலி தாக்கல் செய்யாததால் நஜிப் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோன்று 1993இல் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் துன் அப்துல் கஃபார் பாபாவுக்கும் போட்டி நிலவியது.
இப்போட்டியிலிருந்து கஃபார் பாபா பின்வாங்கியதால் அன்வார் போட்டியின்றி துணைத் தலைவராக பதவியேற்றார்.
அதற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் துணைப் பிரதமர் பதவியிலிருந்து கஃபார் பாபா விலகிட டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
கான்கிரீட் தூண் லோரியை மோதி விபத்து: ஓட்டுனர் பலி
நீலாய்-
இரு கனரக லோரி மற்றொரு லோரியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் லோரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 43.6ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இவ்விபத்தில் அச்சாலை நெரிசலுக்குள்ளானது.
இன்று காலை 7.00 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் கான்கீரிட் தூண்களை ஏற்றிச் சென்ற கனரக லோரியின் பின்னால் மற்றொரு கனரக லோரி மோதியது. லோரி ஓட்டுனரான முஹாம்மட் முகமட் ஜிடின் (வயது 27) தலைப்பகுதி, உடம்பில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மரணித்தார் என நீலாய் தீயணைப்பு, மீட்புப் படையின் தலைவர் கைருலிஸால் அபு காசிம் தெரிவித்தார்.
இதில் கான்கிரீட் லோரியின் ஓட்டுனர் காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் 27 மணிநேரத்திற்குப் பின்னர் லோரியில் சிக்கிக் கொண்ட ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாங்கு ஜாபார் சிரம்பான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)