Friday 11 September 2020

கந்தன் கல்லுமலை காளியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா ரத்து

எஸ்.லிங்கேஸ்வரன்

சிம்மோர்-

உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 நோய் தொற்று காரணமாக சிம்மோர், கந்தன் கல்லுமலை ஶ்ரீ மஹா காளியம்மன் ஆலய வருடாந்திர தீமிதி திருவிழா இவ்வாண்டு நடைபெறாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

வருடந்தோறும் மிக சிறப்பாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பெரும் திரளோடு நடத்தப்பட்டு ஆலய வருடாந்திர திருவிழா இவ்விழா கோவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக இவ்வாண்டு நடத்தப்படாது என ஆலய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஶ்ரீ ஹரி தெரிவித்தார்.

நாளை 12ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் காவடி ஏந்துதல், தீச்சட்டி ஏந்துதல், முடி காணிக்கை, நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்ற எவ்வித நடவடிக்கையும் ஆலயத்தில் இடம்பெறாது. 

திருவிழா நாளில் ஆலயம் வழக்கம்போல் திறந்திருக்கும். வழிபாடு செய்பவர்கள் விரும்புபவர்கள் ஆலயத்திற்கு வரலாம். 12 வயதுகுட்பட்டவர்களும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும்  ஆலயத்திற்கு வருகை புரிவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.


No comments:

Post a Comment