Saturday, 17 August 2019

குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டும்- ஸாகீர் நாய்க் நோட்டீஸ்

கோலாலம்பூர்-

தம் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அறிகை வெளியிட்ட மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டும் என்று சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் நோட்டீஸ் அனுப்பியிள்ளார்.
ஸாகீர் நாய்க்கை பிரதிநிதிக்கும் அக்பெர்டின் & கோ வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்த் புத்ராஜெயாவிலுள்ள மனிதவள அமைச்சர் அலுவலகத்திற்கு இந்த கடிதம் இன்று வழங்கப்பட்டது.

‘ஸாகீர் நாய்க் மலேசியாவில் இருப்பது அனைத்து மலேசியர்களுக்கும் சங்கடமாக உள்ளது’ எனும் தலைப்பில் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்ட குலசேகரன் அதற்காக மன்னிப்பு கோருவதோடு அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும். அதோடு இந்த சட்ட நடவடிக்கைக்கான நஷ்ட ஈட்டையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

48 மணிநேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லையேல் நீதிமன்ற நடவடிக்கை குன்னெடுக்கப்படும் என்றும் வழக்கறிஞர் தரப்பு கூறியுள்ளது.

Friday, 16 August 2019

கார் விபத்தில் ஆனந்தபவன் உரிமையாளர் மனைவி பலி

தைப்பிங்-
மலேசியாவில் புகழ்பெற்ற ஆனந்தபவன் உணவகத்திண் உரிமையாளர் ஹரிகிருஷ்ணனும் அவர்தம் குடும்பத்தினரும் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை 3.25 மணியளவில் தைப்பிங்கிலிருந்து பினாங்கு நோக்கி செல்லும் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 200.9ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.

வேகக்கட்டுப்பாட்டை  இழந்த வாகனம் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஹரிகிருஷ்ணனின் துணைவியார் திருமதி  புவனேஸ்வரி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஹரிகிருஷ்ணன், அவரது இரு புதல்வர்களும் காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெறுவதற்காக தைப்பிங் மருத்துவமனைக்குக் கொன்டுச் செல்லப்பட்டனர்.

மரணமடைந்த திருமதி புவனேஸ்வரின் உடல் சவப்பரிசோதனைக்காக பாரிட் புந்தார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

சிறுமி நோரா மரணத்தில் குற்ற அம்சம் இல்லை; போலீஸ் உறுதி

சிரம்பான் -

10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன அயர்லாந்து நாட்டு சிறுமியின் பசி, மன அழுத்தத்தின் பாதிப்புகளினால் இறந்துள்ளார். அவரின் மரணத்திற்கு கற்பழிப்பு உட்பட எவ்வித குற்ற முகாந்திரமும் இல்லை என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் முகமட் மாட் யுசோரி தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இங்குள்ள ரிசோர்ட் ஒன்றிலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமியை தேடும் பணி முடக்கி விடப்பட்டது. இறுதியில் அச்சிறூமியின் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற சவபரிசோதனை முடிவில், பசி, மன அழுத்தத்தின் காரணமாக குடல் வெடித்தி சிறுமி நோரா இறந்துள்ளார் என உறுதி செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

சிறுமி கற்பழிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படுவதால் அவர் கடத்தல் நடவடிக்கைக்கு ஆட்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

Thursday, 15 August 2019

பெ.ஆ.சங்கத்தின் ஒப்புதலுடன் ‘ஜாவி’ அமல்படுத்தலாம்- கல்வி அமைச்சு

புத்ராஜெயா-
‘காட்’  சித்திர மொழிக்கு பதிலாக ஜாவி எழுத்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒப்புதலோடு தாய்மொழிப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘காட்’ சித்திர மொழி விவகாரம் முஸ்லீம் அல்லாதோரிடையே அதிருப்தியை அலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது கல்வி அமைச்சு அதன் முடிவிலிருந்து இறங்கி வந்துள்ளது.

முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் ‘காட்’ மொழியை பள்ளிகளில் எவ்வாறு அமல்படுத்துவது என்பதை ஆசிரியர்களே தீர்மானிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனாலும் அதற்கான எதிர்ப்பு ஓயாத நிலையில், தற்போதைய அமைச்சரவைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி, காட் மொழிக்கு பதிலாக 'ஜாவி' மொழியை பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர், மாணவர் சம்மதத்துடன் தமிழ், சீனப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தலாம் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பள்ளிகளில் நடைமுறையிலுள்ள போதனையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரோவில் புதிய எச்.டி அலைவரிசைகள்


கோலாலம்பூர்-
 நாளை 15ஆம் தேதி தொடக்கம் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய், சன் டிவி அலைவரிசைகளின் உள்ளடக்கங்களைத் துல்லிய ஒளிபரப்பில் கண்டு மகிழலாம். அதை வேளையில், அண்மையில் மேம்படுத்தப்பட்ட தங்கத்திரை அலைவரிசை 241-யின் புதிய திரைப்படங்களைத் தற்போது எச்.டி-யில் கண்டு களிக்கலாம். 


ஸ்டார் விஜய் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் சன் டிவி எச்.டி (அலைவரிசை 234) திரைப்படங்கள், நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்ற உள்ளடக்கங்களை ஆஸ்ட்ரோ கோவிலும் இடம்பெறும். 

ஸ்டார் விஜய் எச்.டி-யில் சூப்பர் சிங்கர் சீசன் 7, பிக் பாஸ் சீசன் 3, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், பாரதி கண்ணம்மா, எங்கிட்ட மோததே சீசன் 2 நிகழ்ச்சிகளும் சன் டிவி எச்.டி-யில் சன் சிங்கர், லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, கல்யாண பரிசு, வள்ளி ஆகிய நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன.


அதுமட்டுமின்றி, ஆன் டிமாண்ட் சேவையை அணுகி ஸ்டார் விஜய் எச்.டி அலைவரிசை 232-யின் குறிப்பிட்ட உள்ளடக்கங்களையும் தங்கத்திரை அலைவரிசை 241-யில் இம்மாதம் ஒளியேறும் கேம் ஓவர்,  செவன், ராட்சசி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களையும் கண்டு களிக்கலாம். 


ஸாகீர் நாய்க்கை வெளியேற்றுக; அமைச்சர்கள் வலியுறுத்து

கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாய்க் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட வேன்டும் என்ற தங்களை நிலைப்பாட்டை இந்திய அமைச்சர்கள் இன்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளனர்.
சில நாட்களாக சர்ச்சைக்கு வித்திட்ட ஸாகீர் நாய்க் விவகாரம் இன்றைய அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் குலசேகரன் முன்பு கூறியிருந்தார்.

அதன்படி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸாகீர் நாய்க் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் குலசேகரன், தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங், நீர், நிலம், இயறகை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் ஆகியோர் பிரதமர் துன் மகாதீரிடம் தங்களது ஆதங்கத்தை முன்வைத்தனர்.

ஸாகீர் நாய்க் மலேசியாவில் இருப்பதால் எவ்வித நன்மையு வந்துவிடப்போவதில்லை என்ற எங்களின் கருத்துகளுக்கு பிரதமர் செவி சாய்த்தார்.  இதன் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அவரின்  முன்டிவுக்கே தாங்கள் விட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் கிளந்தானின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸாகீர் நாய்க், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 100% ஆதரவு கொடுக்கும் மலேசிய இந்தியர்கள் பிரதமர் துன் மகாதீரிடம் விஸ்வாசம் காட்டுவதில்லை என்று கூறியது நாட்டில் பெரும் சர்ச்சையாக  வெடித்து வருகிறது.

சட்டம், வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் அர்விந்த் ராஜ்

ஷா ஆலம்-
எம்.எஸ்.யூ பல்கலைக்கழகத்தில் சட்டம்,வர்த்தகத் துறையில் பயின்ற அர்விந்த் ராஜ் த/பெ ராதா@தேவன் இளங்கலை பட்டம் பெற்றார்.
அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் இப்பட்டத்தை பெற்றார்.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்கு மத்தியில் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளது தமது சேர்த்த பெருமையாக கருதுகிறேன் என்று அர்விந்த் ராஜ் தெரிவித்தார்.

இவரின் தந்தை ராதா@ தேவன் வாடகைக் கார் ஓட்டுனர் ஆவார்.

இளங்கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நிதி மோசடி தொடர்பில் பயிற்சியை இவர் மேற்கொண்டார்.

இளங்கலை பட்டம் பெற்ற அர்விந்த் ராஜுக்கு பெற்றோர் ராதா@தேவன்- திருமதி ஆர்.கமலா. உடன்பிறந்தோர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வீரமான் ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019 கீழ்காணும்படி நடைபெறவுள்ளது. 

நாள்: 17 ஆகஸ்ட் 2019 (சனிக்கிழமை)

நேரம்: காலை 7.00 - மாலை 5.00 வரை

இடம்: ஜுப்ளி பேராக் மண்டபம், SSAAS கட்டடம், ஷா ஆலம்.

சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019க்கு மாண்புமிகு/ டத்தோ/ திரு/ திருமதி உங்களை அன்போடு அழைக்கின்றது.

இம்மாநாட்டிற்கு வரும் ஆலய நிர்வாகத்தினர் பதிவு சான்றிதழ் நகல் ( ஆர்ஓஎஸ் ), நிர்வாக செயற்குழுவினர் பெயர் பட்டியலையும் உடன் எடுத்துக் கொண்டு வரவும்.

இந்த மாநாட்டில் சிலாங்கூர் மாநில தேசிய பதிவு இலாகா & வருமான வரி துறை ஆகியவற்றின் விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.

மேல் விவரங்களுக்கு 03-5544 7306 என்ற எண்ணில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.  


Wednesday, 14 August 2019

காணாமல் போன ஐரிஷ் சிறுமியின் சடலம் மீட்பு

நீலாய்-
காணாமல் போனதாக கூறப்பட்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிறுமியின் உடலை தேடுதல், மீட்புக் குழுவினர் மீட்டனர்.
பிற்பகல் 1.57 மணியளவில் நீலாய், டுசுன் ரிசோர்ட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் முகமட் மாட் யூசோப் தெரிவித்தார்.

கடந்த 4ஆம் தேதி காணாமல் போன சிறுமி நோரா அன்னே குய்ரினை தேடும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மீட்கப்பட்ட சடலம் சவப்பரிசோதனைக்காக துவாங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

‘காட்’ விவகாரம்; ஆசிரியர்களை ‘பலிகடா’ ஆக்குகிறதா கல்வி அமைச்சு?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அடுத்தாண்டு முதல் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘காட்’ எனப்படும் அரேபிய சித்திர மொழி பயிற்சி திட்டத்தில் ஆசிரியர்களை ‘பலிகடா’வாக்க கல்வி அமைச்சு முனைந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
தாய்மொழிப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ‘காட்’ சித்திர மொழி பயிற்சிக்கு தமிழ், சீனப் பள்ளிகளின் பிரதிநிதிகளும் பொது அமைப்புகளும் பெற்றோர் போர்க்கொடி  தூக்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக் வெளியிட்ட அறிக்கையில், இவ்விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது எனவும் 3 பக்கங்களில் மட்டுமே இப்பயிற்சி இடம்பெறும் எனவும் கூறப்பட்டது.

அதோடு, தேர்வு பாடமாக வகைப்படுத்தப்பட்டுள்ள ‘காட்’ பயிற்சி திட்டத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்பதை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
‘காட்’ அமலாக்கம் செய்யப்படுவது தொடர்பிலான முடிவு ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது ‘கழுவுற மீனில் நழுவுற மீனாக’ கல்வி அமைச்சின் நடவடிக்கை அமைந்துள்ளது.

'காட்' விவகாரத்தில் ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டாலும் கல்வி அமைச்சு போடும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே ஆசிரியர்கள் விளங்குவர். கல்வி அமைச்சின் உத்தரவை மீறி செயல்பட விரும்பாத ஆசிரியர்கள் நிச்சயம் மாணவர்கள் ‘காட்’ சித்திர மொழி பயிற்சியை திணிக்கவே முற்படுவர். அதையும் தங்களது கடமைகளில் ஒன்றாகவே செய்ய முற்படுவர்.
ஆசிரியர்கள் கட்டாயமாக மாணவர்களிடம் ‘காட்’ பயிற்சி திட்டத்தை போதிக்கும்போது அங்கு ஆசிரியருக்கும் பெற்றோருக்குமிடையே வாக்குவாதங்கள் எழலாம். பெற்றோரின் வாதத்தை விட கல்வி அமைச்சின் உத்தரவையே பின்பற்றபோகும் ஆசிரியர்கள் ஒரு தர்ம சங்கடமான சூழலை எதிர்கொள்ளும் நிலையில் இந்த மனகசப்பு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதற்கு வெகுநாட்கள் ஆகாது.

மாணவரை அடிப்பது குறித்து பெற்றோர் வாக்குவாதம் புரிந்தாலே அம்மாணவனை ஓரம்கட்டும் சில ஆசிரியர்களும் இருக்கின்ற நிலையில் காட் விவகாரத்தில் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதம் புரிந்தால் அது மாணவனையே பெரிதும் பாதிக்கும்.

‘காட்’ சித்திர மொழி விவகாரத்தில் சமூக அமைப்புகள், பெற்றோர் ஆகியோரிடத்திலிருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஆசிரியரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டாலும் அவர்களை ஆட்டுவிக்கும் சக்தியாக கல்வி அமைச்சே திகழும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சு ஆசிரியர்களை ‘பலிகடா’ ஆக்கி வேடிக்கை பார்க்கிறது கல்வி அமைச்சு.


Tuesday, 13 August 2019

'காட்' அமலாக்கத்தின் விளைவுகளை ஆராய்வீர்- மணிமாறன் வலியுறுத்து

ஷா ஆலம்-
'காட்' எனப்படும் அரேபிய சித்திர மொழி அமலாக்கத்தினால் இப்போது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால்  ஜசெக 40% ஆதரவை இழக்கக்கூடும் என்று கூறிய ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் கூற்றை பக்காத்தான் ஹராப்பான் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று மலேசிய  இந்தியர் குரல் இயக்கத்தின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் மணிமாறன் வலியுறுத்தினார்.
தாய்மொழிப்பள்ளிகளில் 'காட்' பயிற்சி திட்டம் அமல்படுத்தப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு முஸ்லீம் அல்லாதோரிடையே மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சரின் இந்த விபரீத முடிவினால் சீனர்கள், இந்தியர்களின் வெறுப்புணர்வு ஜசெக பிரதிநிதிகளின் மீது ஏற்படுவதால் அது ஜசெகவின் வெற்றியை வெகுவாக பாதிக்கச் செய்கிறது என்ற லிம் கிட் சியாங்கின் கூற்று நடைமுறைக்கு ஏற்புடையதாகும்.

முஸ்லீம் அல்லாதோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் கருத்தில் கொள்வது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

அதோடு, 'காட்' சித்திர மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி வாரியக்குழு ஆகியவை கண்டனப் பதாகைகளை தங்களது பள்ளிகளில் தொங்க விடச் செய்ய வேண்டும்.

அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பதை கல்வி அமைச்சு புரிந்து கொள்ளும் என்று அவர் சொன்னார்.