Friday 12 April 2019

அரசரின் ஆளுமைக்குள் உட்பட்டால் மலேசியா ஜனநாயக நாடாக திகழ முடியாது- பிரதமர்

கோலாலம்பூர்-
மாநில மந்திரி பெசாரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை ஆளும் கட்சி இழக்குமானால் மலேசியா ஒரு ஜனநாயக நாடாக கருத முடியாது. அது முழுமையாக அரசரால் கட்டுப்படுத்தப்பட்ட நாடாக மட்டுமே பார்க்க முடியும் என்று பிரதமர் துன் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

அரசியலமைப்பு சட்டவிதிகளின்படி மலேசியா ஒரு ஜனநாயக நாடு. அரசரின் அதிகாரத்தில் இந்நாடு கட்டுப்படுத்தப்படவில்லை.

கூட்டரசு மாநிலங்களின் அரசியலமைப்பு முறையில் பேரரசரின் தலைமையில் ஆட்சியை வழிநடத்த நாம் ஒப்புக் கொன்டுள்ளோம்.பிரதமர், மந்திரி பெசார் பேரரசராலும் சுல்தான்கலாலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நமது நாடு ஜனநாயக நாடாக திகழ முடியாது.

மக்களின் உரிமை மறுக்கப்பட்டால் இனியும் ஜனநாயக நாடு என நாம் சொல்லி கொன்டிருக்க முடியாது. மக்களே நாட்டை ஆளும் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதுவே மாநில மந்திரி பெசாரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொன்டுள்ளது எனவும் துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மாநில விவகாரத்தில் சில தரப்பினர் குழப்பம் ஏற்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேன்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இஸ்கண்டார் குறிப்பிட்டதை அடுத்து துன் மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.

No comments:

Post a Comment