Friday 5 April 2019

ராகாவில் மாட்டி விடலாமா 2.0: ரசிகர்கள் ரிம 6,000 வரை வெல்லும் வாய்ப்பு



ராகாவில் மாட்டி விடலாமா 2.0 எனும் போட்டி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தொடக்கம் ராகா வானொலியில் இடம்பெறவுள்ளது. ரசிகர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு ரிம 6,000 வரை ரொக்கப் பரிசு தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.

இப்போட்டி ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் கலக்கல் காலை’, ‘வணக்கம் ராகா’, ‘இன்னிக்கு என்ன கதை’, ‘ஹப்பார் மாலை மற்றும் வாங்க பழகலாம்’ எனும் நிகழ்ச்சிகளில் இடம்பெறும்.

பங்கெடுக்க விரும்புவார்கள் ராகாவுடன் இணைந்திருந்து அறிவிப்பாளர்கள் அழைக்கலாம் என்று சொன்னவுடனே 03-95430993 எண்களுக்கு அழைக்க வேண்டும். அதன் பிறகு, ராகாவில் மாட்டி விடலாமா 2.0 போட்டியின் முதல் அழைப்பாளருக்கு அறிவிப்பாளர்கள், அண்மைய செய்தி, சினிமா, பொது அறிவு சார்ந்த ஒரு கேள்வியைக் கேட்பார்கள். அந்தக் கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லி ரிம 100 வெல்லலாம்.

அதுமட்டுமின்றி, அந்த அழைப்பாளர் சரியான பதிலைச் சொன்னால், அறிவிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். இந்தத் தண்டனையை ரசிகர்கள் ராகாவின் அதிகாரப்பூர்வ முகநூலிலில் நேரலையாக கண்டு களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு, raaga.fm அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

No comments:

Post a Comment