Thursday 4 April 2019

"நான் குற்றவாளி அல்ல" நீதிமன்றம் நிரூபிக்கும்- டத்தோஶ்ரீ நஜிப் நம்பிக்கை

கோலாலம்பூர்,
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட் தமது வங்கி கணக்கில் வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, இன்று மதியம் 1.50 மணியளவில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வந்தடைந்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், தாம் குற்றவாளி இல்லை என நம்பிக்கை தெரிவித்தார்.

 " எனது முதலாவது கட்ட விசாரணையை முடித்து விட்டேன்; ஒரு நியாயமான நீதிமன்றம் என்னை குற்றவாளி அல்ல என நிரூபிக்கும்" என்று தமது ஃபேஸ்புக் அகப்பக்கத்தில் டத்தோஶ்ரீ நஜிப் பதிவு செய்துள்ளார்.

 டத்தோஶ்ரீ நஜிப்-பின் பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் சில தரப்பின் ஆதரவும் அதே சமயம் சில தரப்பின் எதிர்ப்பும் பெருகி வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் நாட்டின் ஆறாவது பிரதமராகவும் பெக்கான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் டத்தோஶ்ரீ நஜிப் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.

No comments:

Post a Comment