புத்ராஜெயா-
கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் அவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு ஆக்கப்பூர்வ திட்டங்கள் விகுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார்.
இம்முடிவு மாணவர்களின் கல்வி அடைவு நிலையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதோடு, இவ்வாண்டுக்கான எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகள் அடுத்தாண்டு முதலாம் காலாண்டிற்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment