Saturday 7 December 2019

கால்நடை மருத்துர் பாலியல் வல்லுறவு; குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்

ஹைதராபாத்-
கூட்டு பாலியல் வல்லுறவுக்கு பின்னர் எரித்து படுகொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரை தாக்கி தப்பியோட முயற்சித்தபோது போலீசார் மேற்கொண்ட  அதிரடி நடவடிக்கையில் இந்நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெலுங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தனது பணியை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 27 வயதான பிரியங்கா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும்சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நடந்தவற்றை கூறும்படி போலீசார் கேட்டபோது போலீசார் அவர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மெஹபூப்  நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி எனும் கிராமத்தில் நிகழ்ந்தது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

No comments:

Post a Comment