புத்ராஜெயா-
நாட்டின் 15ஆவது
மாமன்னராக முடி சூடப்பட்டுள்ள சுல்தான் முகமட் வி அதிகாரப்பூர்வ பிறந்தநாள்
கொண்டாட்டம் ஜூன் மாதத்திலிருந்து ஜூலை மாதத்திற்கு மாற்றம் செய்வதற்கு அரசாங்கம்
ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜூன் முதல் வார
சனிக்கிழமை கொண்டாடப்பட வேண்டிய மாமன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஜூலை மாத
இறுதி வார சனிக்கிழமை கொண்டாடப்படும். இது 2017 முதல் 2021 வரை அமலில் இருக்கும்
என் பிரதமர் துறை இலாகா வெளியிட்டுள்ள அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 முதல் 2019 வரை ஜூன்
முதல் வார சனிக்கிழமை ரமடான் மாதம் அனுசரிக்கப்படுவதால் மாமன்னரின் பிறந்தநாள்
கொண்டாட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப
மாமன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஜூலை 29ஆம் தேதி நடைபெறும் என அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment