Saturday 29 April 2017

நாட்டின் உருமாற்றத்திற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும் - டத்தோ சரவணன்

 நாட்டின் உருமாற்றத்திற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும் - டத்தோ சரவணன்





கோலகங்சார்
வரும் காலத்தில் நிகழக்கூடிய உருமாற்றத்திற்கு இன்றைய மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் கூறினார்.

தற்போதைய சூழலில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியில் நாமும் பயணிக்க வேண்டிய கட்டாய  சூழல் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் தோட்டப்புறங்களில் நாம் வேலை செய்தோம் என்ற வரலாறு உள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் தோட்டப்புறங்களில் அந்நியத் தொழிலாளர்களே ஆக்கிரமித்துள்ளனர். தோட்டத்துறையிலும் நமக்கான வாய்ப்புகள் இல்லை.

ஆதலால் நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை கல்வியை திறமை வாய்ந்தவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். கல்வி கற்ற சமூகமே அனைத்துத் துறையிலும் முன்னேறி நிற்கும் என்பதை உணர்ந்து மாணவர்கள் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கோலகங்சார் காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் வலியுறுத்தினார்.



இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டத்தோ சரவணன் உட்பட பள்ளி தலைமையாசிரியர்கள், பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.


No comments:

Post a Comment